நேற்று அசாத்தியமாய் இருந்தது,
இன்று சாத்தியமாகும் அற்புதத்தை
ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம்
- காந்திஜி
Thursday, November 26, 2009
Wednesday, September 16, 2009
தூற்றுதல் ஒழி
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Monday, July 13, 2009
வெற்றி
வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.
அன்பு
இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.
நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.

நான் மட்டும் ஏன்?
ஆணி அடித்தார் போல நெஞ்சத்தில் பதிந்துபோன பல குட்டிகதைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். புரியாத பல கருகலான விஷயங்களை எளிதில் அவை நமக்கு புரியவைத்துவிடும். குழப்பமான நேரங்களில் அவை நம் நினைவுக்கு வந்து ஆறுதல் தரும். ஒரு விதமான சாந்தியை கொடுக்கும். ஆனால் இன்றைக்கு எழுதப்படும் ”குட்டிக்” கதைகளோ விஷத்தை வீதிகளில் தெளித்துக் கொண்டிருப்பது சோகத்திலும் சோகம்.
துறவி ஒருவர் நதியினிலே நீராடிக் கொண்டிருந்தாராம். அவரின் சீடர்கள் நதிக்கரையிலே அமர்ந்திருந்தனர். ஆற்று நீரிலே தவறி விழுந்த தேளொன்று தண்ணீரிலே தத்தளித்துக் கொண்டிருப்பதை அத்துறவி பார்த்துவிட்டார். தன் கைகளினாலே அத்தேளை தூக்கி தரையினிலே விட எத்தனித்தார். அவ்வளவுதான் மறுவினாடியே அத்தேள் அவர் கையிலே கொட்டியது. வலியினால் கையை உதறிய துறவியின் கையிலிருந்து தேள் மீண்டும் தண்ணீரிலே விழுந்தது. வினாடிகூட தாமதிக்காமல் மீண்டும் அத்துறவி தன் கைகளினால் அத்தேளை தூக்கி காப்பாற்ற முயலுகின்றார். ஆனால் மறுகணம் மீண்டும் அத்தேள் துறவியின் கரத்தை கொட்டுகிறது. இதனை பார்த்துக் கொண்டிருந்த சீடர்கள் "அதை விட்டுத்தள்ளுங்கள் குருவே! நீங்கள் அதற்கு நன்மை செய்ய விழைய விழைய ஆனால் அது உங்களுக்கு தீமையல்லவோ செய்கின்றது" என கேட்கின்றனர். ஆனால் அத்துறவியோ விடுவதாய் இல்லை."நல்லது செய்வது என் சுவாபம் என்றால் கொட்டுவது அதன் சுபாவம்.அது தன் குணத்தை மாற்றாத போது நான் மட்டும் ஏன் என் குணத்தை மாற்றவேண்டும்" என கேட்டாராம்.

விருந்தோம்பல்!
விருந்தோம்பல்!
அயர்ன்புரம் என்ற ஊரின் அருகே பெரிய காடு இருந்தது. அந்தக் காட்டில் கொடிய வேடன் ஒருவன் வசித்தான். ஒரு நாள் காட்டில் பெரும் புயல் அடித்தது. பயங்கர மழையும் பெய்தது. இடியும், மின்னலும் பயங்கரமாக இருந்தது. காடு எங்கும் பயங்கர வெள்ளமாக காட்சியளித்தது.
மேடும் பள்ளமும் தெரியாத அளவு காட்டில் வெள்ளம் பெருகி இருந்தது. அந்தக் காட்டில் பாதை தெரியாமல் குளிரில் நடுங்கியபடியே வேடன் நடந்து கொண்டிருந்தான். மழையிலும் புயலிலும் அடிபட்டு ஒரு பெண் புறா தண்ணீரில் விழுந்து கிடந்தது. பாவம் அது குளிரில் நடுங்கி கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது.
வேடன் அந்த புறாவை கண்டுவிட்டான். அதை எடுத்து தன் பைக்குள் போட்டுக் கொண்டு ஒரு மரத்தடியில் வந்து அமர்ந்தான். அந்த மரத்தில் புறா ஒன்று வெகு நாட்களாக குடும்பம் நடத்தி வந்தது. அப்போது காட்டில் ஆண் புறா மட்டுமே இருந்தது. இரை தேடி வெளியே பறந்து சென்ற பெண் புறா இன்னும் திரும்பி வரவில்லை. எனவே, ஆண் புறா கவலையுடன் தன் மனைவியான பெண் புறாவைத் தேடிக் கொண்டிருந்தது. பெண் புறாவோ வேடனிடம் அகப்பட்டுக் கொண்டது. அது மரத்தடியில் அமர்ந்திருந்த வேடனின் பைக்குள் கிடந்து தவித்துக் கொண்டிருந்தது. ஆண் புறா அழுது கண்ணீர் வடிப்பதை அது கேட்டு மனம் குமுறியது.
""அய்யோ என் அருமைக் கணவரே... நான் வேடனிடம் சிக்கிக் கொண்டுள்ளேன். என்னை நினைத்து நீங்கள் புலம்ப வேண்டாம். நாம் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். செயலாலும் எண்ணத்தாலும் நாம் பிறருக்கு உதவி செய்ய வேண்டும். நாம் அன்புடன் வாழ்ந்த மரத்தடியில் இந்த வேடன் தஞ்சமாக வந்து தங்கியுள்ளான். அவன் எத்தகைய கொடியவன். ஆனாலும் நம்மால் விருந்தோம்பப் பட வேண்டியவன். இவன் குளிரால் தவிக்கிறான், பசியால் வாடிக் கொண்டிருக்கிறான். இவனுக்கு உதவுங்கள். நான் இறந்தாலும் வேறு ஒரு பெண் புறாவை மனைவியாக கொள்ளுங்கள்,'' என்று தன் கணவனிடம் பெண் புறா கூவியது.
இதைக் கேட்டு ஆண் புறா வேடன் அருகே வந்தது. வேடன் குளிரால் நடுங்கி வெட வெடத்துக் கொண்டிருந்தான். ஆண் புறா வேடனை அன்புடன் உபசரித்து, ""வேடனே உனக்கு என்ன தேவை. கூச்சப்படாமல் என்னிடம் சொல். பகைவன் ஆனாலும், வீட்டுக்கு வந்துவிட்டால் அவனை உபசரித்து மகிழ்விப்பது எங்கள் வழக்கம்,'' என்றது.
""ஏ ஆண் புறாவே நான் வேடன், எனக்கு நீ உதவ முன் வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. புறா இனங்களை வேட்டையாடும் எங்களை பகைவராக அல்லவா நீ கருத வேண்டும்,'' என்றான்.
""வேடரே, நீ சொல்வது சரிதான். நீர் எங்களுக்கு பகைவர்தான். ஆனால், வெட்ட வருபவனுக்கு மரம் நிழல் கொடுக்கிறதே. அது போல் தான் தீமை செய்தவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உதவ வந்தேன்,'' என்று கூறியது. வேடன் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தான். அவன் புறாவைப் பார்த்து, ""என்னால் குளிரை தாங்க முடியவில்லை. படுபயங்கரமாக குளிர்கிறது. என் குளிரை போக்க வழியுண்டா,'' என்று கேட்டான்.
""அன்புள்ள ஆண் புறாவே, நீ என் குளிரை போக்க உதவி செய்தாய். இப்போது எனக்கு கடுமையாக பசிக்கிறது. என் பசியை போக்க ஏதாவது செய்,'' என்றான்.
""வேடரே, நாங்கள் ஏழை புறாக்கள். கவலை இல்லாமல் வாழ்பவர்கள், அன்றாடம் கிடைக்கும் உணவை சாப்பிட்டு நிம்மதியாக தூங்கி விடுவோம். மறு நாளைக்கு சேர்த்து வைப்பது இல்லை. எங்கள் காடுகளில் ஒன்றும் இல்லை. ஆனாலும், விருந்தினரான உம்மை பசியால் வாட விடுவது சரியானது அல்ல. எனவே, உமக்கு உணவு தர நான் தயாராகிவிட்டேன்,'' என்று கூறியது. பின்னர் எரியும் தீயை அதிகமாக்கியது. தீ மள மளவென எரிந்தது. நெருப்பை வலம் வந்து அதில் குதித்தது.
""வேடரே, எனக்கு வேறு வழி தெரியவில்லை. எனவே, என்னையே உமக்கு உணவாக தருகிறேன்,'' என்று கூறியது. தீயில் அதன் உடல் கருகி வெந்து அதன் உயிர் பிரிந்தது. வேடன் இதைக் கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தான். புறாவின் விருந்தோம்பல் அவனை திகைப்படைய வைத்தது.
""நான் பெரும் பாவி. புத்தியற்றவன். இவ்வளவு அருமையான அன்புள்ள புறாக்களை நான் வேட்டையாடி குவித்துள்ளேன். இனி இந்த பாவத் தொழிலை செய்யமாட்டேன்,'' என்று எண்ணி வருந்தினான். தன் கையில் வேட்டையாட வைத்திருந்த பொருட்களை தூக்கி வீசி எறிந்தான். பெண் புறாவையும் விடுதலை செய்தான்.
பெண் புறா விடுதலை அடைந்ததும் தன் கணவனின் தியாகத்தை எண்ணி மகிழ்ந்தது. தானும் தீயில் விழுந்து இறந்தது. தவறை எண்ணி மனம் வருந்திய வேடன் அன்று முதல் வேட்டையாடும் தொழிலை விட்டான்.
டியர் பட்டூஸ்... அடைக்கலம் புகுந்தவன் எவ்வளவு கொடியவனாக இருந்தாலும் அவனை உயிரைக் கொடுத்தாவது காத்த புறாக்களின் அன்பு எத்தனை மேலானது பார்த்தீர்களா?
நன்றி தினமலர்!

Wednesday, June 24, 2009
தற்பெருமை - 2
ஒரு தடவை முல்லா ஒரு குளக்கரை ஒரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது வழியில் இருந்த ஒரு கல் தடுக்கி குளத்தில் விழ அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு மனிதர் பாய்ந்து வந்து முல்லாவைக் குளத்தில் விழாமல் காப்பாற்றினார்.
முல்லா அவருக்கு நன்றி சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
ஆனால் முல்லாவைக் காப்பாற்றியவரோ சும்மா இருக்கவில்லை. முல்லாவை எந்த இடத்தில் யாருக்கு நடுவே சந்தித்தாலும் குளத்தில் விழ இருந்த முல்லாவை நான்தான் காப்பாற்றினேன் என்று சொல்ல தொடங்கிவிட்டார்.
அவருடைய தற்பெருமைப் பேச்சைக் கேட்டுக் கேட்டு முல்லாவுக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டது. அவருக்கு தகுந்த நேரத்தில் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று தீர்மானித்தார்.
ஒரு நாள் பழைய குளக்கரைப் பக்கம் ஜன நடமாட்டம் அதிகமாக இருந்தது. அந்தப் பக்கம் வந்த முல்லா அந்த தற்பெருமைக்காரர் குளக்கரையில் யாரோ ஒருவருடன் உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்.
திடீரென முல்லா குளத்தினுள் பாய்ந்து விட்டார்.
முல்லா குளத்தில் விழுந்து விட்டார் என நாலாபுறமிருந்த மக்களிடமிருந்து கூக்குரல் எழுந்தன.
பலர் முல்லாவைக் காப்பாற்றுவதற்காக குளத்தில் இறங்கினர்.
முன்னர் முல்லாவைக் குளத்தில் விழாமல் காப்பாற்றியவரும் அவசர அவசரமாகக் குளத்தில் இறங்கினார்.
முல்லாவோ யாரைப் பற்றியும் கவலைப்படாமல் குளத்தில் நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்தார்.
முல்லாவுக்கு நீந்தத் தெரியும் என்ற விஷயம் இதுவரை யாருக்கமே தெரியாது.
முல்லா முன்னர் தம்மைக் காப்பாற்றியதாக தற்பெருமை பேசும் மனிதரைச் சுட்டிக் காண்பித்து என் அருமை நண்பரை உங்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்த நினைக்கிறேன். நீந்தத் தெரிந்த என்னை இந்தக் கனவான் ஒரு தடவை நீரில் மூழ்கி விடாமல் காப்பாற்றி பேருதவி செய்தார் என்றார்.

முல்லா
ஒரு தடவை முல்லா ஒரு திருமணத்திற்க்கு சென்றார்.
பல முறை அவர் திருமணங்களுக்கு சென்று திரும்பி வரும் போது
அவரது செருப்பு காணாமல் போய்விட்டது.
அதனால் இந்த திருமண வீட்டில் செருப்பை வெளியில் வெட்டுச் செல்ல
முல்லாவிற்க்கு மனம் வரவில்லை.
செருப்புக்களை இழக்க விரும்பாத முல்லா அதனை யாருக்கும்
தெரியாதவாறு ஒரு துணியில் சுற்றி கையில் வைத்துக் கொண்டார்.
முல்லாவின் கையில் ஏதோ பொட்டலம் இருப்பதைப் பார்த்த திருமண
வீட்டுக்காரர், “முல்லா
அவர்களே ஏதோ பொட்டலம் வைத்திருக்கிறீர்களே,
அதில் என்ன இருக்கிறது?
மணமகனுக்கு அளிக்க வேண்டிய பரிசா? என்று கேட்டார்.
“இதுவா, இது மிகவும் புனிதமான வேதாந்த நூல்” என்று முல்லா சமாளித்தார்.
“வேதாந்த நூலா? இதை எங்கே வாங்கினீர்கள்?”
என்று திருமண வீட்டுக்காரர் கேள்விகளை
அடுக்கிக் கொண்டே போக எரிச்சலான முல்லா பதிலளித்தார்,
“செருப்புக் கடையில் வாங்கினேன்”.

எது அழகு
எது அழகு
தத்துவ ஞானி சாக்ரடீஸிடம் ஒரு முறை, ''எது அழகு?'' என்று கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்கு சாக்ரடீஸ் தந்த பதில்: ''பானையில் உணவு இருக்கிறது. அதை எடுக்க உதவுவது எது? தங்கக் கரண்டியா... மர அகப்பையா? எது பயனுள்ளதாக இருக்கிறதோ, அதுவே அழகு என்றாராம்”.

Labels:
moral stories,
stories in tamil,
story,
எது அழகு
Monday, June 22, 2009
புகழ்
புக்கர் டி வாஷிங்டன் என்ற அமெரிக்க புரொபசர், எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர். இவர், பிரபலமாகாத காலகட்டம். ஒருமுறை, அருகிலிருந்த தேவாலயத்துக்குச் சென்றார் புக்கர் டி வாஷிங்டன். கறுப்பினத்தவர் என்பதால், அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். ''நீங்கள் என்னை உள்ளே விடாவிட்டால் பரவாயில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை கடவுள் எனக்குச் சொல்வார்'' என்று கூறிவிட்டுத் திரும்பினார் அவர். காலங்கள் நகர்ந்தன. புக்கர் டி வாஷிங்டன் எழுதிய பல புத்தகங்கள், அவருக்குப் பேரும் புகழும் பெற்றுத் தந்தன. சுமார் பத்து வருடங்களுக்கு பிறகு, மீண்டும் அந்த தேவாலயத்துக்குச் சென்றார் அவர். அப்போதும் அவரை உள்ளே செல்ல அனுமதிக்காதவர்கள், ''என்ன... கடவுள் ஏதாவது சொன்னாரா?'' என்று அவரது பழைய வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொண்டு, ஏளனமாகக் கேள்வி கேட்டனர்.
உடனே புக்கர் டி வாஷிங்டன், ''இப்போது, நான் உங்களைப் பார்க்கவே வந்தேன். சர்ச்சுக்கு வரவில்லை. ஏனென்றால், கடவுள் என்னிடம், 'நானே அந்த சர்ச்சுக்கு செல்வதில்லை. நீ ஏன் செல்கிறாய்?' எனக் கேட்டு விட்டார்'' என்றாராம்

Saturday, June 20, 2009
தற்பெருமை
விஞ்ஞானி ஒருவர், தன்னைப் போலவே அச்சாக பல மனிதர்களை உருவாக்கும் நுட்ப்பத்தைக் கண்டறிந்தார். அதன்படி அவர் உருவாக்கிய நகல்களுக்கும் அசலுக்கும் வித்தியாசமே தெரியவில்லை! ஒரு நாள், தன் உயிரைக் கவர்ந்து செல்ல எமதர்மன் வரப் போகிறான் என்பதை அறிந்தார் விஞ்ஞானி. ஏற்கனவே தான் உருவாக்கி வைத்திருந்த ஒரு டஜன் நகல் மனிதர்களுக்கு நடுவில் போய் நின்று கொண்டார்.
பூலோகம் வந்த எமதர்மன், உருவத்தில் விஞ்ஞானியைப் போன்றே இருக்கும் பதின்மூன்று பேரில் உண்மையானவர் யார் என்பதை அறிய முடியாமல் குழம்பிப்போனார். வெறுங்கையுடன் திரும்பினான். மரணத்தை வென்று விட்டதாகக் குதூகலித்தார் விஞ்ஞானி. இருப்பிடம் திரும்பிய எமதர்மன் நன்கு யோசித்தான். அவன் மனதில் ஒரு திட்டம் பளிச்சிட்டது. பாசக்கயிற்றுடன் பூலோகம் வந்தவன், விஞ்ஞானியின் இடத்தை அடைந்தான்.
''ஐயா! நீங்கள் பேரறிஞர்தாம். உங்களைப் போலவே ஒரு டஜன் உருவங்களைச் செய்து விட்டீர்கள். ஆனால். ஒரே ஒரு குறை...'' என்றான். விஞ்ஞானிக்குப் பொறுக்கவில்லை. ''என்ன குறை கண்டீர்?'' என்று எமதர்மனின் கைகளைப் பிடித்துக் கேட்டார். உடனே எமதர்மன், ''தற்பெருமை என்ற குறைதான். வாருங்கள் எமலோகத்துக்கு'' என்று விஞ்ஞானியை இழுத்துச் சென்றான்.
படிப்பாலும் கல்வியாலும் வருகிற அகங்காரம் மற்றவர்களின் அறிவால் இது வெறும் அறியாமையே என்று உணர்த்துகையில் தான் நாம் நம்மையே உணர்கிறோம்.

stories,
stories in tamil,
தற்பெருமை
Subscribe to:
Comments (Atom)