Sunday, August 21, 2011

கடி

""குரங்குகிட்டே "செல்' இருந்தாலும், அத வச்சி குரங்கு யார்கிட்டேயும் பேசமுடியாது!''"
"ஏன்?''"
"குரங்குகிட்டே இருக்கிறது "விலங்கு செல்'லாச்சே!''

""அந்த ஹோட்டல்லே சாப்பிட்டா நாள் முழுக்கச் சாப்பிட்டுக்கிட்டே இருக்கலாம்!''"
"அடடா! அவ்வளவு டேஸ்டா இருக்குமா?''
""டேஸ்டா இருந்தாத்தான் உடனே சாப்பிட்டுடலாமே!''

""வெள்ளை மாத்திரை கொஞ்சம் கசக்குது. சிவப்பு மாத்திரை கொஞ்சம் இனிக்குது!''"
"சரி, இதை எதுக்கு என்கிட்டே வந்து சொல்ற
நீங்கதானே டாக்டர் மாத்திரை சாப்பிட்டுட்டு எப்படி இருக்குன்னு வந்து சொல்லச் சொன்னீங்க!''

Wednesday, August 10, 2011

சாக்ரடீஸ் பொன்மொழிகள்

இசையை ரசிக்கத் தெரிந்தவர்கள் வாழ்க்கையையும் ரசிக்கத் தெரிந்தவர்களாகவே இருப்பார்கள்.

நீங்கள் நேசிக்கப்படவேண்டும் என்று விரும்பினால் முதலில் நீங்கள் மற்றவர்களை நேசிக்கத் தொடங்குங்கள்.

நீங்கள் விரும்பிய வண்ணம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள தளராமல் முயற்சி செய்யுங்கள்.

உங்களுடைய உலகம் உங்களிடமிருந்தே தொடங்குகிறது.

ஒவ்வொருவரும் தன்னுடைய கடமை எதுவென்று உணர்ந்து அதைச் சிறந்த முறையில் செய்துகொண்டிருந்தால் சமுதாயம் வளர்ச்சி அடையும்.

குழந்தைகளை மனிதநேயமுடையவர்களாக வளர்க்கும் கடமை பெற்றோர்களுக்கு உண்டு.

குழந்தைகளை நல்லவர்களாக வளர்ப்பதன் மூலம் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கலாம்.

யார் தன்னுடைய வேலை அல்லது தொழிலைச் சரியாகச் செய்கிறாரோ, அவர் கடவுளுக்குப் பிரியமானவர்.

சிறந்த எண்ணம், கீழான எண்ணத்தை அடக்குகிறபோது மனிதன் தனக்குத் தானே தலைவனாகிறான்.

தனக்கு நேரக்கூடிய துன்பத்தை மனதின் சமநிலையோடு பொறுத்துக்கொள்கிறவனே மனிதருள் உயர்ந்தவன்.

ஒரு செடி, வளர்வதற்கான முழு ஆற்றலுடன் இருக்கும்போது காற்றும் மழையும் கடுமையான வெப்பமும் அதை என்ன செய்துவிட முடியும்? துணிவும் அறிவும் கொண்ட உள்ளம் எந்த நிலையிலும் கலக்கமோ, குழப்பமோ அடையாது.

உங்கள் மனம் அழகானதாக இருந்தால் நீங்கள் காணும் காட்சிகளும் அழகாகவே இருக்கும்.

நகைச்சுவை

ஆசிரியை : நீ யாரை வெறுக்கிற
மாணவர் : ராஜா ராம் மோகன் ராய்
ஆசிரியை : அடப்பாவி ஏன்
மாணவர் : அவர் தான் குழந்தை திருமண முறையை ஒழிச்சாரு

Thursday, July 28, 2011

பொன்மொழிகள்

* எத்தனைப் படிகள் என்று மலைக்காதீர்கள். எல்லாப் படிகளும் கடக்கக்கூடியவையே! - ராமலிங்க வள்ளலார்.

* நமது நாக்கு மிகச் சிறிய உறுப்பாக இருந்தாலும், மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. சிறு தீப்பொறி பெருங் காட்டையே கொளுத்திவிடுவதைப்போல, நம் நாவிலிருந்து வரும் தவறான ஒரு வார்த்தை நம் வாழ்க்கையையே வீணாக்கிவிடும் - விவிலியம்.

* தனக்காக வாழ்வது என்பது இறகைவிட லேசானது. பிறருக்காக வாழ்வது மலையைவிடப் பளுவானது. அந்தப் பளுவைச் சுமக்கத் தயாரானவனே சவாலான வாழ்க்கையை வாழ்கிறான் - மாவோ.

* ஜாதகத்தையும், ஜோதிடத்தையும் நம்பி அதில் வாழ்க்கையைத் தேடாதீர்கள்! நல்ல வாழ்க்கை என்பது கடும் உழைப்பின் பின்னால் மறைந்திருக்கிறது - நேரு

.* நேற்று என்பது உடைந்த பானை. இன்று என்பது கையில் உள்ள வீணை. நாளை என்பதோ, மதில் மேல் பூனை. எனவே இன்று இருக்கக்கூடிய வீணை என்னும் காலத்தை நற்செயல்கள் என்னும் விரல்களால் மீட்டி நல்லிசை பிறக்கச் செய்யுங்கள்! - இந்தியா

* ஆற்றலைவிட ஆர்வமே வெற்றிக்கு அடிப்படைக் காரணமாகும் - சார்லஸ் பக்ஸ்டன்.

* பசித்தோருக்கு உணவிடுவதே என் மதம். வறியவரிடமும், பாமரரிடமும் அன்புடன் பழகுபவரே என் கடவுள் - விவேகானந்தர்.

* சோம்பேறிகள் முன்னால் வைரத்தைக் கொட்டினாலும் கடைக்கு எடுத்துச் சென்று விற்கவேண்டுமே என்று அழுவார்கள் - அரேபியா

.* சம்பாதிப்பதால் ஒருவன் பணக்காரன் ஆவதில்லை. சேமித்து வைப்பதால்தான் அந்த நிலையை அடைகிறான் - பின்லாந்து.

* சிறிய புண்களையும், ஏழை உறவினர்களையும் ஒருபோதும் அலட்சியம் செய்யாதீர்கள் - ஸ்வீடன்.

Sunday, May 29, 2011

மன அழுத்தத்தை தவிர்க்க பத்து கட்டளைகள்

1.கடைசி நிமிடப் பரபரப்பைத் தவிருங்கள்.

எங்காவது செல்ல வேண்டுமென்றால் ஓர் அரை மணி நேரம் முன்பாகவே கிளம்புவது, காலையில் ஒரு பதினைந்து நிமிடம் முன்னதாகவே எழுந்து விடுதல், பயணத்திற்குத் தேவையானவற்றை முந்தின நாளே எடுத்து வைத்துக்கொள்வது, போன்றவற்றை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

2.ஒரு நேரம் ஒரு வேலையை மட்டுமே செய்யுங்கள்.

எட்டு வேலைகளைப் பற்றி சிந்தித்துக்கொண்டு ஒன்பதாவது வேலையைச் செய்துகொண்டிருந்தால் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும். என்ன செய்யவேண்டும் என்பதைப் பட்டியலிடுங்கள். மிக முக்கியமான விஷயங்களை முதலில் செய்யுங்கள். எல்லா வேலைகளையும் செய்ய வேண்டுமென்ற கட்டாயமில்லை. போதுமான ஓய்வு நேரம் உங்கள் பட்டியலில் நிச்சயம் இருக்கட்டும்.

3.உங்களுக்கு மன அழுத்தம் தரக்கூடிய விஷயங்களை ஒதுக்குங்கள்.

இரைச்சல், வெளிச்சம், தாமதம், சிலவகை வாசனைகள், சில நபர்கள்………. இத்தியாதி….. இத்தியாதி என இந்தப்பட்டியல் எவ்வளவு பெரிதாக வேண்டுமானால் இருக்கலாம். முடிந்தவரை ஒதுக்குங்கள். ஒதுக்க முடியாத சூழல்களில் நீங்களே கொஞ்சம் ஒதுங்கிப் போய் விடுங்கள்.

4.உடற்பயிற்சி செய்யுங்கள்.

ஆரோக்யமான உடல், மன அழுத்தத்தின் எதிரி. உடலில் ரத்த ஓட்டமும், ஆக்சிஜன் விநியோகமும் சீராக இருக்கும்போது மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. எனவே மூச்சுப் பயிற்சி போன்றவையும், வாக்கிங், ஜாகிங், போன்றவையும் உங்கள் தினசரி அட்டவணையில் இடம் பெறட்டும்.

5.தீய பழக்கங்களை கை கழுவி விடுங்கள்.

புகை, மது, போதை போன்றவைகள் மன அழுத்தத்தை அதிகரிக்கும் காரணிகள்.

6.எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

திருப்தியடையும் மனநிலை இருந்தால் வாழ்க்கை அழகாகும். குழந்தைகளுக்கு மன அழுத்தம் வருவதில்லை. காரணம் அவர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை.

7.ஒரு நல்ல பொழுதுபோக்கை கைவசம் வைத்திருங்கள்.

உங்களுக்கு ரொம்பவே பிடித்த விஷயமாய் அது இருக்கட்டும். உங்களுடைய மனதை உற்சாகமாகவும், ஆனந்தமாகவும் வைத்திருக்க அது உதவும். குழந்தைகளுடன் பொழுதைக் கழிப்பது, செல்லப் பிராணிகளுடன் விளையாடுவது என தினமும் கொஞ்ச நேரம் செலவிடுங்கள்.

8.பாசிடிவ் சிந்தனைகளை மனதில் கொண்டிருங்கள்.

நடந்து முடிந்த நிகழ்வுகளின் மோசமான பக்கங்களை அடிக்கடி நினைத்துக் கொண்டிருக்காதீர்கள்.

9.சின்னச்சின்ன வெற்றிகளைக்கூட கொண்டாடுங்கள்.

சின்னச் சின்ன வெற்றிகளின் கூட்டுத்தொகையே பெரிய வெற்றி என்பதை மனதில் எழுதுங்கள்.

10.பிறருடன் நம்மை ஒப்பிடாதீர்கள்.

பிறருடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பது தேவையற்ற மன அழுத்தத்தை கொண்டு வந்து சேர்க்கும். அவர்களுடைய வெற்றி, தோற்றம், அந்தஸ்து, பணம் என எதை ஒப்பிட்டாலும் அது உங்களுக்கு மன அழுத்தத்தையே தரும்.

Sunday, February 13, 2011

துன்பத்திற்கு தீர்வு

உங்களது வாழ்க்கைக்கு அல்லது, உங்களது நிலைமைக்கு பொறுப்பு வேறொருவர் என்றால், அவரால் நீங்கள் பல விதங்களில் ஏமாற்றம் அடைய போவது நிச்சயம். இதை தவிர்க்க முடியாது.

எந்த ஒரு மனிதராலுமே, நீங்கள் விரும்பியபடியே 100 சதவிகிதம் நடக்க முடியாது. உங்களை சுற்றி உள்ளவர்களிடம் உங்கள் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது என்றால் நீங்கள் அதிகமாக ஏமாந்து போவீர்கள் என்பதே உண்மை.

உங்கள் எதிர்பார்புகளை அவர்களால் நிறைவேற்ற முடியாத போதும், நீங்கள் நினைத்தபடி அவர்கள் செயல்படாத போதும், அவர்கள் மீது உங்களுக்கு கோபம் வரும். மேலும் உங்கள் துன்பத்திற்கு காரணம் அவர்கள்தான் என்று நீங்கள் நம்பினால், கண்டிப்பாக உங்களுக்கு கோபம் குடி கொண்டு விடும். கோபம் வெறுப்பாக மாறும்.

உங்கள் வாழ்க்கையின் இன்பமும், துன்பமும் உங்கள் கைகளில்தான் உள்ளது. உங்கள் வாழ்க்கை அனுபவத்திற்கு வேறொரு வரை பொறுப்பாக நினைத்தால் கண்டிப்பாக ஏமாற்றம்தான் மிஞ்சும்.

Sunday, January 16, 2011

அல்சர் வருவதற்குக் காரணம்

அல்சர் வருவதற்குக் காரணம் பொதுவாக நேரத்திற்கு சாப்பிடாமை, அதிகக் காரமான உணவுகளை சாப்பிடுவது, மசாலா உணவுகளை எடுத்துக் கொள்வதே ஆகும்.

நமது உணவுகளை செரிமானம் செய்வதற்காக பல்வேறு அமிலங்கள் வயிற்றில் சுரக்கின்றன.

உணவு சாப்பிடாத சமயத்தில், வெறும் வயிற்றில் இந்த அமிலங்கள் சுரப்பதால் இவை வயிற்றின் சவ்வுகளை அரித்து புண்ணை ஏற்படுத்திவிடுகின்றன.

இதேப்போலத்தான் அதிகக் காரமான உணவுகளை செரிமானம் செய்ய வேண்டும் எனில் அதிகமான அமிலங்கள் சுரக்க வேண்டும். எனவே அதிக அமிலம் சுரக்கும் போது அவையும் வயிற்றின் உள் சவ்வுகளை அரித்து புண்ணை ஏற்படுத்தி விடுகின்றன.

பொதுவாக குளிர் காலத்தில் கார வகைகளை சாப்பிடுவதை விட, வெயில் காலத்தில் சாப்பிடும் கார உணவுகளால் அதிக பாதிப்பு ஏற்படும்.

எனவே, நேரத்திற்கு சாப்பிட்டு, கார உணவுகளைக் குறைத்துக் கொள்வதால் அல்சரைத் தவிர்க்கலாம்.

பொதுவாகவே மிளகாய் உடலுக்கு ஆகாத ஒரு பொருளாகும். மனிதனைத் தவிர மற்ற விலங்குகள் மிளகாயை சாப்பிடுவதில்லை. மிளகாயை சாப்பிடத் துவங்கியதில் இருந்துதான் மனிதனுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படத் துவங்கின. அல்சர் வரக் காரணமே மிளகாய் தான். எனவே மிளகாயைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

அல்சரை‌க் குறை‌க்க காரத்தைக் குறைக்க வேண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம். அதே சமய‌ம், ‌நீ‌ங்க‌ள் எ‌ப்போது‌ம் சா‌ப்‌பி‌ட வே‌ண்டிய நேர‌ம் வரும் போது வ‌யிறு‌ம் அ‌ந்த சமய‌த்‌தி‌ல் ப‌சி‌க்க‌த் துவ‌ங்கு‌ம். ஒரு வேளை ‌நீ‌ங்க‌ள் சா‌ப்‌பிட இ‌ன்னு‌ம் ‌சில நேர‌ம் ‌பிடி‌க்கு‌ம் எ‌ன்று அ‌றி‌ந்தா‌ல் உடனடியாக ஒரு ட‌ம்ள‌ர் த‌ண்‌ணீரையாவது குடியு‌ங்க‌ள்.

அல்சர் வந்தவர்கள் அதற்கான மருந்துகளை உட்கொண்டு, வயிற்றுக்கு ரத்த ஓட்டம் கிடைக்கக் கூடிய வகையிலான ஆசனங்களைச் செய்யலாம். யோக முத்ரா போன்ற ஆசனங்கள் அல்சருக்கு நல்ல பலனைத் தரும்.

நன்றி: http://tamil.webdunia.com/miscellaneous/yoga/articles/0912/09/1091209014_1.htm