நீங்கள் உங்கள் இயக்குனர் அல்லது முதலாளியிடம் வேலை செய்யும் போது அவருடன் உங்களால் ஒத்துப்போக முடியவில்லை. இதற்கு பல காரணங்கள் உண்டு, சில நியாயமாகவும் இருக்கலாம்; நீங்கள் வேலையை விட்டுவிடலாமா அல்லது வேறு ஒருவரிடம் வேலையில் சேர்ந்துவிடலாமா என பல நேரங்களில் நினைப்பதுண்டு.
இவை அனைத்திற்கும் நீங்கள் உங்கள் வேலையில், உங்கள் மேலாளர் மீது கொண்டுள்ள கற்பனையான எண்ணங்களே காரணம்.
இந்த கற்பனையில் இருந்து வெளிவந்து எது நியாயமான நிலை என ஆராய்ந்தால் உங்கள் பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைத்துவிடும்.
இதோ அணுகுமுறைகள் :
1. நீங்கள் வேலை செய்யும் விதத்தை முன்பே முடிவு செய்துவிடாதீர்கள், இப்படித்தான் செய்ய வேண்டும் என்று. இது உங்களின் பிறவிக் குணமாக இருக்கலாம், அல்லது நீங்கள் பழகிய குணமாக இருக்கலாம்.
உங்களை நிர்வகிப்பவர், புதிய முறையில் செய்ய சொல்லும்போது உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதனால் உங்களுக்கும் அவருக்கும் பிரச்சனை ஆரம்பிக்கிறது. இதனால் வேலையை வெறுக்கிறீர்கள்.
2. சில நேரங்களில் நீங்கள் அதிமேதாவியாக நின்றுகொண்டு வேலையில் உள்ள விபரங் களை அறியாமல் வேலை செய்வதால் இடையில் வரும் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் போகிறது; இதனால் மேலாளர் உங்களை சரிசெய்ய வேண்டி உள்ளது.
இந்த இரண்டு சூழ்நிலையிலும் வேலையை விட்டு உங்களை அனுப்புவதற்கு மேலாளர் விரும்புவதில்லை. அதே சமயம் நீங்களாக வேலையை விட்டு வேறு வேலைக்கு செல்வதும் சரியான முடிவு இல்லை. நீங்கள் புது வேலைக்கு சென்றாலும் இதே பிரச்சனை வராது என்பதற்கு உத்திரவாதம் இல்லை. அதே போல் புதியவரை வேலைக்குஎடுக்கும் நிறுவனத்திற்கும் மீண்டும் இதே பிரச்சனை வரநேரிடும்!
இதற்கு வழிதான் என்ன?
1. எதிர்மறையான எண்ணங்கள் கொண்டவர் கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வது எப்போதும் புதியதல்ல. “Boss always boss” தலைவர் எப்போதும் தலைவர்தான்; எனவே அவருடைய எண்ணங்கள், செயல்களுக்கு மதிப்பு கொடுங்கள். அதேசமயம் தவறுகளை நாசுக்காக, நேரம் காலம் அறிந்து சுட்டிக் காட்டுங்கள். அதற்காக கொடுக்கப்பட்ட வேலையை தலைவர் சொன்ன விதத்தில் முடிப்பதுதான் உங்களுக்கும் உங்கள் நிறவனத்திற்கும் நல்லது.
2. நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காதது கோபம், மன உழற்சி, வெறுப்பு, பொறாமை இவை அனைத்தும் மனிதனுடன் பிறந்த குணங்கள். இவை பலபேர் வேலைசெய்யும் நிறுவனத்தில் இருக்கத்தான் செய்யும். இவற்றிற்கு முழுவதுமாக நீங்கள் அடிமையாகிவிட்டால் உங்கள் வளர்ச்சி நிறுவனத்தில் கேள்விக்குறியாகிவிடும்.
எனவே மற்றவர்களிடம் நன்கு பழகும் தன்மையை வளர்த்துக்கொள்ளுங்கள். இது உங் களின் இயக்குனராக இருக்கலாம், உங்களுக்கு சமமான இடத்தில் பணி புரிபவராக இருக்கலாம் அல்லது உங்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர் கள், மாணவர்களாக இருக்கலாம்.
உங்களிடம் உள்ள, உணர்ச்சிக்கு அடிமைப் படாத தன்னை, வேலையில் உள்ள உங்கள் ஈடுபாடு உங்களை மற்றவர்களிடமிருந்து வேறு படுத்திக் காட்டும். அதே சமயம் உங்களின் கோபம், விரக்தி, பொறாமை இவைகள் உங்கள் வளர்ச்சியை மட்டுமல்லாமல், உங்களைச் சார்ந்து இருக்கும் குழு மற்றும் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு தடையாக அமையும்.
உங்கள் இயக்குநர்கள் என்ன எதிர்பார்க் கிறார்கள் என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள். ஒரு நிறுவனத்தின் திட்டங்களை இயக்குநர் செயல்படுத்த வேண்டும். அதனால் அவருடைய திட்டங்கள் என்ன, எப்படி செயல் படுத்த விரும்புகிறார் என்பதை உற்று கவனி யுங்கள். அதற்கு ஏற்றாற்போல் உங்கள் வேலை செய்யும் முறையை மாற்றி அமையுங்கள், வேலை களை செய்து முடியுங்கள். நீங்கள், இடையில் ஏற்படும் சங்கடங்களை காலம் வரும்போது எடுத்துச் சொல்லி அதற்கு தீர்வு காண முயற்சி செய்யுங்கள்.
அதேபோல் இயக்குநராக நீங்கள் உயர்ந்து விட்டால், உங்கள் வளர்ச்சியின் போது கிடைத்த அனுபவங்களை வைத்து, நீங்கள் உதவியாளராக வேலை செய்த காலத்தில் இருந்த அந்தந்த பிரச் சனைகளை கருத்தில் கொண்டு இயக்குனராக பணியாற்றுங்கள்.
உங்களிடம் வேலை செய்பவர்களை உற்சாகப்படுத்துங்கள்.
அவர்களின் உணர்ச்சி களை புரிந்துகொள்ளுங்கள். அவர்களின் பிரச்சனைகளை புரிந்துகொண்டு அதை சரி செய்ய அறிவுரை கூறுங்கள்.
சிந்தனைகள், யோசனைகளை எப்போதும் ஒத்துச் செல்லும் என்பது கிடையாது. நல்ல யோசனைகளாக இருந்தால் உடனடியாக எடுத்துக்கொண்டு செயல்படுத்த முயற்சி செய்யுங்கள்.
புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகளுக்கு உறுதுணையாக இருங்கள். உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் தெளிவான முடிவுகள் உங்களையும் உங்களை சார்ந்தவர்களையும் முன்னேற்றும் என்பதில் ஐயமில்லை.
Wednesday, October 27, 2010
நிலையான நட்பு
முகம் பார்க்காமல் முதல் அறிமுகம்
வார்த்தைகளில் தொடங்கி வருடங்கள் பல கடந்து வளர்பிறையாய்
முகவரி தெரியாமல் முழு நிலவாய்
அகம் அறியாது இனம் புரியாத நட்பு
எண்ணங்கள் நினைவுகளில் இடும் அலங்காரம்
இனிய நாட்கள் இன்ப ஒளி வீசி மலர்ந்து சிரிக்கும்
நெருடல்கள் இல்லாது வணங்கி கொண்டு
நெஞ்சை வருடி நெகிழ்வு தருமது நட்பு
இடங்கள் பல மாறியது உண்டு
தொடர்ந்தே என்றும் இணைந்து வந்ததுண்டு
அன்பே உருவான இனிய இதயத்தோடு
முதுமை வரைக்கும் வருமோ இளமை மாறா நட்பு
கண்ட உண்மையில் கற்பனை மறைந்துவிடும்
கொண்ட நட்பினால் உள்ளம் அளவிலா மகிழ்ச்சி கொள்ளும்
எல்லைதனை வகுத்து புரிந்து கொண்டால்
குறையின்றி நெறியோடு நீண்டநாள் வாழ்ந்திடும் நிலையான நட்பு.
நன்றி :-http://www.greatestdreams.com/

மனம் நோகப் பேசக்கூடாது
* உண்மையை மறக்காமல் எப்போதும் பொய்யை விலக்கி விட்டு வாழுங்கள். உண்மையையே பேசுங்கள். பிறருக்கு இதமானவற்றைச் செய்யுங்கள். இவ்வகையில் உண்மையை உரைத்தல் எப்போதும் கடினம் தான்.
* உணவு வகைகளை மிதமிஞ்சி உண்ணும் பழக்கம்கூடாது. அது மிகமிகத் தீமையைப் பயக்கும். உணவுப்பொருள்களை தேவையோடு அளவாகத் தான் எடுத்துக் கொள்வது நல்லது.
* ஊமையை ஊமை என்று சொல்வதும், நோயுற்றவனை நோயாளி என்றும் சொல்வது உண்மையாயினும் இவ்வாறெல்லாம் சொல்லுதல் சரியன்று. ஏனென்றால் இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மனம் நோகும்.
* தானம் நான்கு வகையாகும். அவை, உணவு, மருந்து,சாஸ்திரம், அபயம் என்பனவாகும். இந்த நான்கு வகை தானங்களும் அவசியம் செய்ய வேண்டியவை ஆகும்.
* மன்னிப்பு கேட்பதன் மூலம் அன்பு செய்யும் குணம் உண்டாகும். அக்குணத்தின் மூலம் அச்சம் அகன்று விடும். தூய்மை நெஞ்சில் பிறக்கும்.
* புறத்தூய்மையை விட அகத்தூய்மையே மிகவும் சிறந்தது. புறத்தூய்மை வேண்டும் என்பதற்காக வாசனைத்தைலம் இட்டு நீராடுகின்ற மனமே கூடாது.
-மகாவீரர்

Monday, October 25, 2010
மகன்கள் ரசிக்கும் அம்மாவின் பத்து குணங்கள்
1.காலேஜ் போயிட்டு வந்ததும் எதும் சாப்டுறியாடான்னு கேக்குற பரிவு...
2.அதிகாலையில் தூக்கத்தை எழுப்பிவிட்டு முடி கோதியபடி இன்னும் என்னடா தூக்கம்ன்னு சொல்லி பெட்ல வைக்கிற காபி....
3.சாப்பிடும்போது இன்னும் கொஞ்சம் போட்டுக்கடான்ற பாசம்...
4.வீட்டுக்கு லேட் நைட் வந்தாலும் , தன்னோட தூக்கம் கெட்டாலும்... பரவாயில்லன்னு நினைச்சு சாப்ட்டியாடா ந்னு கேட்டு சாப்பாடு போடுற அன்பு...
5.கேட்ட பணம் அப்பா கொடுக்காத போது தன்னோட சேமிப்பு டப்பால இருந்து மீதி பணம் கொடுக்குற அன்பு...
6. நம்ம எவ்வளவு சேட்டை செய்தாலும் சொந்தபந்தங்க கிட்ட நம்மல இவன் நல்லவன்னு அறிமுகப்படுத்துறது...
7.தனக்கு பிடித்த சீரியல் போய்ட்டு இருந்தாலும் நமக்காக சன் மியூசிக் பாக்க அனுமதிக்கிறது...
8.டேய் இன்னைக்கு ஞாயிற்றுகிழமை என்ன கறி வேணும் சிக்கன் வேணுமா,மட்டன் வேணுமான்னு கேட்டுட்டு சமைக்கிறது...
9.பரீட்சை டைமில நைட் பூரா மாங்கு மாங்குன்னு படிக்கும் போது அப்போ அப்போ கொடுக்குற டீ...
10.கோவிலுக்கு கூட்டிட்டு போயி அங்க எதுனா அழகான பொண்ணு வந்தா இந்த மாதிரிதாண்டா உனக்கு பொண்ணு பாக்கணும்ன்னு சொல்லுறது...
நன்றி :-http://priyamudanvasanth.blogspot.com/

சிந்தனை செய் மனமே
'உன்னவிட நான்தான் அதிகமாக சம்பாதிக்கிறேன்' என்று மனைவியோ, அல்லது 'உன்னைவிட எனக்குத்தான் அதிக சொத்து பத்து இருக்கு' என்று கணவனோ அகங்காரத்தோடு நடக்க ஆரம்பித்தால்... கணவன் & மனைவி உறவு என்பது இரண்டு எதிரிகளுக்கு இடையிலான உறவுபோல இறுக்கமானதாகிவிடும்.
Friday, October 22, 2010
மாதங்களும் தாக்கும் நோய்களும்
ஜனவரி - பிப்ரவரி மாதங்கள் பனிக்காலம் என்பதால் தோல் பிரச்சனைகள் ஏற்படும். குளிர் அதிகமாக இருப்பதால் போதைப் பார்ட்டிகளின் மது அளவும் கூடும், இதனால் நெஞ்செரிச்சல், தொண்டை வலி, ரத்த அழுத்தம் ஆகியவையும் எட்டிபார்க்கும்.
முன் எச்சரிக்கை : நெஞ்சு எரிச்சல், சுவாசத்தடை ஆகியவை வந்தால்...அதுவே தொடர்ந்தால்... அதிகமாக வலி எடுத்தால் அது இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம். உடனே ரத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது. உணவில் உளுந்து, கோதுமை அதிகமாக சேர்த்துக்கொள்ளவும் அதோடு பருப்பு, பயிறு, கீரை ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்வது நல்லது. எண்ணெய் குளியல் உடல் வெப்பத்தை சீராக்கும். வெயில் நம் உடம்பில் படுமாறும் இருப்பது நல்லது.
தவிர்க்க வேண்டியவை : குளிர்ந்த நீர், கூழ் டிரிங்ஸ், பிரிஜ்ஜில் வைத்த உணவுகள் ஆகியவற்றைத் தொடவே கூடாது. அதே போல, குளிர்ந்த நீரில் குளிப்பதும் நல்லதல்ல.
மார்ச் - ஏப்ரல் மாதங்களில் வெய்யிலின் தாக்கம் அதிகரிக்கும். இதனால் உடலில் நீர்த் தன்மை வற்றிப் போகும். நமது உடலில் வெப்பத்தின் அளவும் கூடும். வாந்தி, வயிற்று போக்கு, ஆஸ்துமா, இருமல், பசியின்மை, சளித் தொல்லை, அலர்ஜி, தலைவலி மற்றும் வைரஸ் நோய்கள் நம்மை தாக்கும்.
முன் எச்சரிக்கை : ஆஸ்துமா வந்தால் கவனமாக இருக்கவும். வந்த தொடக்கத்திலேயே அதை கட்டுப்படுத்திவிடவும். இல்லாவிட்டால் காய்ச்சல் வந்து நிமோனியாவாக மாறிவிடும். பசியின்மை ஏற்பட்டால் சாதரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே டாக்டரை அனுகுவது நல்லது. கீரை, பழவகை, சார்ந்த உணவுகளை அதிகமாக சாப்பிடவும். அடிக்கடி ஜீரணக் குறைவு ஏற்படும் என்பதால் சுக்கு, சீரகம் கலந்த நீரைக் குடிக்கப் பயன்படுத்தவும்.
தவிர்க்க வேண்டியவை : பகல் தூக்கம் ஆகவே ஆகாது. கொழுப்புள்ள உணவை அறவே தவிர்க்கவும். அதுபோல், உளுந்து சேர்த்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
மே - ஜூன் மாதங்கள் பருவக்காலம் மாற்றம் ஏற்படும் சமயம். வெயில் உச்சத்தை அடையும். இதனால் அம்மை நோய், கண் தொடர்பான நோய்கள், மஞ்சள் காமாலை, வாத நோய், மூட்டு பிரச்சனைகள் உடல் சோர்வு ஏற்படும். குழந்தைகள் மண்ணில் விளையாடுவதால் அவர்களுக்கு தோல் சம்மந்தப்பட்ட நோய்கள் வரும்.
முன் எச்சரிக்கை : அம்மை நோய் மற்றும் கண் தொடர்பான நோய்கள் சீக்கிரமாகவே அடுத்தவருக்கும் பரவும் என்பதால் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. நமது உடலை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். பழங்களை சாப்பிடும் போது சுத்தமான நீரில் நன்றாக கழுவிய பிறகு சாப்பிடவும். இனிப்பான உணவு, பயறு, உளுந்து, காய்கறிகளை அதிகமாக சாப்பிடவும்.
தவிர்க்க வேண்டியவை : கடினமான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டாம். வெயில் உடம்பில், தலையில் படாமல் இருப்பது நல்லது.
ஜூலை - ஆகஸ்ட் மாதங்கள் சிக்கன் கோனிய போன்ற நோய்கள் வரும் காலம். கண் நோய், பசியின்மை, அலர்ஜி ஆகிய பிரச்சனைகளும் ஏற்படும்.
முன் எச்சரிக்கை : காய்ச்சல், கண் நோய் போன்ற தொற்று வியாதிகளின் அறிகுறிகள் தெரிந்தவுடன் டாக்டரை அனுகவும். அரிசி, கோதுமை, பயறு, உளுந்து, பச்சை பட்டானி, மசாலா சேர்த்த உணவுகளை சாப்பிடலாம். குறிப்பாக பயறு கஞ்சி நல்லது.
தவிர்க்க வேண்டியவை : மதிய தூக்கம் கூடாது. அதிக சூடான உணவுகளை சாப்பிட வேண்டாம். வெயிலில் அலையக் கூடாது. கொசு கடிக்காமல் கவனமாக இருக்கவும். அலர்ஜி உணவுகளை தவிர்க்கவும். சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது.
செப்டம்பர் - அக்டோபர் மாதங்கள் மழைக்காலம் என்பதால் ஜலதோசம், வயிற்று நோய்கள், தலைவலி, ஒற்றைத் தலைவலி, இதய நோய், வாத நோய், நெஞ்சு எரிச்சல், பித்தம் தொடர்பான நோய்கள், கண் நோய் ஆகியவை தாக்கும்.
முன் எச்சரிக்கை : இதயத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் உடனடியாக டாக்டரிடம் செல்லவேண்டும். டாக்டர் ஆலோசனைப்படி தேவையான மருந்து, மாத்திரைகளை சாப்பிடவும். கண்களில், காதுகளில் ஏதாவது பிரச்சனைகள் என்றாலும் கவனமாக இருக்கவும். பால், பால்வகை பொருட்கள், முட்டை, மீன், மாமிசம் ஆகிய உணவுகளை சாப்பிடலாம்.
தவிர்க்க வேண்டியவை : குளிர்ந்த உணவு, பகல் தூக்கம், வெயிலில் அலைவது கூடவே கூடாது. அதே போல் பெண்கள் இந்த காலங்களில் விரதம் இருப்பதை தவிர்ப்பது நல்லது.
நவம்பர் - டிசம்பர் மாதங்களில் மழையும் பனியும் சேர்ந்த காலம் என்பதால் சுவாசத்தடை, தும்மல், வயிற்றுக் கோளாறு, தோல் நோய் மற்றும் குழந்தைகளுக்கு பிரச்சனைகள் ஆகியவை ஏற்படும். குளிர்காலம் என்பதால் அதிகமாக மது குடிப்பவர்களுக்கு அது தொடர்பான நோய்கள் தாக்கும்.
முன் எச்சரிக்கை : ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டோடு வைத்திருப்பது நல்லது. மது குடிப்பதை தவிர்க்கவும். எண்ணெய் உணவுகளை ஓர் அளவு சாப்பிடலாம். எண்ணெய் குளியல் நல்லது. உடலில் வியர்வை சொட்டும் அளவிற்கு உடற்பயற்சி அவசியம். கெட்டியான உணவுகளை சாப்பிடவும். உடம்பில் வெயில் படுவது நல்லது.
தவிக்க வேண்டியவை : குளிர்ந்த நீர் மற்றும் கூல்டிரிங்ஸ், ஐஸ்கிரீம் ஆகியவற்றை தவிர்க்கவும். இரவில் குளிக்கக் கூடாது. பிரிட்ஜ் உணவுகளை தவிக்கவும்.
http://www.kheeran.org/2010/09/blog-post_14.html

நட்பு
"சாப்பிட்டேன்" என
அம்மாவிடமும்
"கவலைப்பட வில்லை" என
அப்பாவிடமும்
"அடுத்த மாதத்திற்குள்
வேலை வாங்கிவிடுவேன்" என
அண்ணனிடமும்
"முதல் மாதச் சம்பளத்தில்
உனக்கொரு மடிக்கணினி" என
தங்கையிடமும் சொல்ல முடிந்தது...
"காலையிலிருந்து சாப்பிடல…
ரொம்பப் பசிக்குதுடா,
ஏதாவது வாங்கிக்கொடு"
என நண்பனிடம்
மட்டும் தான் கேட்க முடிந்தது...
அம்மாவிடமும்
"கவலைப்பட வில்லை" என
அப்பாவிடமும்
"அடுத்த மாதத்திற்குள்
வேலை வாங்கிவிடுவேன்" என
அண்ணனிடமும்
"முதல் மாதச் சம்பளத்தில்
உனக்கொரு மடிக்கணினி" என
தங்கையிடமும் சொல்ல முடிந்தது...
"காலையிலிருந்து சாப்பிடல…
ரொம்பப் பசிக்குதுடா,
ஏதாவது வாங்கிக்கொடு"
என நண்பனிடம்
மட்டும் தான் கேட்க முடிந்தது...
Thursday, October 21, 2010
முல்லா
மன்னர் முல்லாவுக்கு ஒரு வீட்டுப் பகுதியை அன்பளிப்பாகக் கொடுத்தார்.
அந்த வீட்டுக்கு மாடி உண்டு. அந்த மாடிப்பகுதியை மன்னர் ஒரு படைத் தளபதிக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார்.
மாடியில் இருக்கும் படைத் தளபதியின் மனைவி அடிக்கடி கல் உரலில் மாவு இடிப்பாள்.
அந்தச் சமயத்தில் கீழ் வீட்டில் இருக்கும் முல்லாவுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும்.
மாவு இடிக்கும் போது வீடே அதிரும். இடியோசை மாதிரி சப்தமும் கேட்கும்.
முல்லா இரண்டு மூன்று தடவை படைத் தளபதியைச் சந்தித்து கொஞ்சம் மெதுவாக மாவு இடிக்கு மாறு அவர் மனைவிக்குச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். படைத் தளபதிக்கோ கோபம் வந்து விட்டது.
இது மன்னர் எனக்காக அளித்த வீடு. ஆகவே இது எனக்குச் சொந்தமானது. என் வீட்டில் என் மனைவி எப்படி வேண்டுமானாலும் மாவு இடிப்பாள். அதைக் கேட்பதற்கு நீ யார் ? என்று முல்லாவை அதட்டி அனுப்பி விட்டார்.
மறுநாள் முல்லா கீழே உள்ள தன் வீட்டுப் பகுதியில் கடப்பாறையைக் கொண்டு இடித்துக் கொண்டிருந்தார்.
கீழே என்ன செய்கிறாய் ? என்று படைத் தளபதி மாடியில் இருந்து அதட்டினார்.
கீழ்ப்பக்கம் இருக்கும் என் வீட்டை முற்றிலுமாக இடித்துத் தள்ளிவிட்டுப் புதிதாக கட்டத் தீர்மானித்திருக்கிறேன் என்றார் முல்லா.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த படைத் தளபதி என்னைய்யா முட்டாளாக இருக்கிறீரே, கீழ்வீடு முழுவதையும் இடித்தால் மேல் வீடு என்ன ஆகும் என்று யோசித்தீரா ? என்று கோபத்தோடு கேட்டார்.
மேல் வீட்டைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும். எனக்குச் சொந்தமான வீட்டை நான் இடிக்கிறேன். இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று கூறி விட்டு முல்லா சுவரை இடிக்கத் தொடங்கினார்.
பதறிப்போன படைத்தளபதி முல்லாவிடம் சமரசம் பேச முற்பட்டார்.
நாம் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒருவரை யொருவர் அனுசரித்தச் செல்வதுதான் நல்லது. நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம் என்றார் தளபதி.
நான் எப்போதுமே யாருக்கும் நண்பன்தான்! என்று கூறிவிட்டு முல்லா சிரித்தார்.

Wednesday, October 20, 2010
காலத்தின் அருமை
காலத்தின் அருமை
1 வருடம் - தோல்வியடைந்த மாணவனுக்குத் தெரியும்.
1 மாதம் - குறை பிரசவத்தில் குழந்தை பெற்ற குணவதிக்குத் தெரியும்.
1 வாரம் - வாரப் பத்திரிக்கை ஆசிரியருக்குத் தெரியும்.
1 நாள் - ஒரு நாள் முன்னதாகப் பதவியில் சேர்ந்து பதவி உயர்வு பெற்றவனைய் பார்த்து பதவி உயர்வு பெறாதவனுக்குத் தெரியும்.
1 மணி - பரிட்சை எழுதும் மாணவனுக்குத் தெரியும்.
1 நிமிடம் - இரயிலைக் கோட்டைவிட்டவனைக் கேட்டால் தெரியும்.
1 வினாடி - ஓட்டப் பந்தயத்தில் ஒரு வினாடியில் தோற்றுப் போனவனுக்குத் தெரியும்.

வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை
கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான்.அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது.அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன்.அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான்.தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான்.ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான்.ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.
கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான்.அங்கு இருந்த ஒரு துறவி,''அய்யா,நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே? இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே?''என்று கேட்டார். வியாபாரி நடந்ததைக் கூறினான்.
துறவி சொன்னார்,''அய்யா,உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது.கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது.இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது.அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்?அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா?'
வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை.
பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை.
இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை.
ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம்.
நமது துன்பங்களுக்கெல்லாம் அது தான் காரணம்.
----இராம கிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை.

Saturday, October 16, 2010
மனம் விட்டுப் பேசுங்கள்
உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன.. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன.
என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது.
ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள்.. போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா?
ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான். விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர். வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள்.
கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். "அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?"
அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். "நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை"
வீரன் மகனைக் கேட்கிறான். "பின் யார் அப்பா?"
"தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்" வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.
மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.
மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். "இதோ என் அப்பா"
திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான். வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.
இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம். மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா?
எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான். புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள்.. அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள்.. அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள். தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது. எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.
அனுதினமும் ஆனந்தமாய் வாழ்ந்திட வாழ்த்துக்களோடு, இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்!!

மவுனம்
மவுனமாக இருப்பது நல்லது. ஆனால், அதற்கு தேவையான மனஅடக்கம் நமக்கு இருப்பதில்லை. உண்மையை நாடுபவர்களுக்கு மவுனம் பெருந்துணையாகும். மவுனத்தால் மனதிலுள்ள தயக்கம் விலகி தெளிவான முடிவினை எட்டமுடியும்.
பேசாமல் இருப்பது மட்டுமே மவுனமாகாது. அவசியமில்லாதவற்றை மனதில் சிந்திக்காமல் இருப்பதே மவுனம். விரதம் என்ற பெயரில் மனதோடு போராடிக் கொண்டிருப்பது நல்லதல்ல. மனதை பூரண அமைதியில் தவழச் செய்வதே சரியான மவுனமாகும்.
மவுனம் பழகப் பழக ஆண்டவனின் குரலை நம்மால் கேட்க முடியும். சத்திய வேட்கை உடையவர்கள் பழகவேண்டிய அடிப்படைக் குணம் மவுனம். கோபத்தைப் போக்கி சாந்த குணத்தை வளர்த்துக் கொள்ள மவுனத்தைப் போல சிறந்த துணை வேறில்லை.
மக்களுக்கு சேவை செய்ய விரும்புபவர்களுக்கு நாவடக்கம் மிகவும் அவசியம். அதற்கு மவுனப்பயிற்சி சரியான வழிகாட்டியாக துணை செய்யும். மிகைப்படுத்துவதும், உள்ளதை மறைப்பதும் மனிதனின் இயல்பான குறைபாடாக இருக்கிறது. அதை மவுனம் அடியோடு போக்கிவிடும்.

சாய்பாபா
நீங்கள் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்போது தான் வாழ்வில் துன்பம் நம்மை தாக்கும்போது, பாறைபோல எதிர்த்து நிற்க முடியும்.
மனிதனுக்குள் உண்டாகும் மிருகவுணர்ச்சியைக் களைந்துவிட்டால், தெய்வீக இயல்புகள் ஊற்றெடுக்கும்.
வேண்டாத பரபரப்பு, பயம், அறியாமையில் சிக்கிக்கொண்டு மனிதர்கள் தவிக்கிறார்கள். கடவுளை முழுமையாகச் சரணடைந்தால் நடப்பது எல்லாம் நன்மைக்கே என்ற தெளிவோடு உலகில் வாழமுடியும்.
உண்மையும் பொய்யும் இவ்வுலகில் கலந்தே இருக்கின்றன. தயிரில் வெண்ணெயைப் பிரித்தெடுப்பதுபோல, உண்மையை மட்டும் தேர்ந்தெடுந்தெடுங்கள். உண்மையின் பக்கமே கடவுள் இருக்கிறார். உண்மை உங்களை என்றும் காப்பாற்றும்.
-சாய்பாபா

Thursday, October 14, 2010
பொன்மொழிகள்
* முதலில் வேலைக்காரனாயிருக்கக் கற்றுக் கொண்டால், எஜமானாகும் தகுதி
பின்னர் தானாகவே வரும்.
* அன்புடையவனே வாழ்பவன். சுயநலமுடையவனோ செத்துக் கொண்டிருக்கின்றான் என்றே பொருள்.
* சேர்ந்து வாழ்தலே சிறந்த வலிமையாகும்.
* எந்த வேலையாக இருந்தாலும் அதைத் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக
மாற்றுபவனே அறிவாளியாவான்.
* தன்னை அடக்கப் பழகிக்கொண்டவன் வேறு எதற்கும் சிக்கமாட்டான். அத்தகைய
தகுதி உள்ளவனே உலகில் நன்றாக வாழத் தகுதியுள்ளவன்.
* பலமே வாழ்வு, பலவீனமே மரணம்.

Sunday, October 10, 2010
காய்கறிகளும் அதன் மகத்துவமும்
காய்கறிகளிலும், கீரை வகைகளிலும் மனித உடலுக்குத் தேவையான ஏராளமான சத்துக்கள் அடங்கியிருப்பது அனைவரும் அறிந்ததே. அதனால்தான் எந்த மருத்துவரிடம் சென்றாலும், அதிகமாக காய்கறியும், கீரையும் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.
எந்த எந்த காய்கறிகளில் என்னென்ன சத்துக்கள் அடங்கியிருக்கின்றன, அதில் என்ன முக்கியத்துவம் என்பதை இங்கு பார்க்கலாம்.
நாம் காய்கறி கடையில் சாதாரணமாக வாங்கும் வெண்டைக்காய் மிகச் சிறந்த மருத்துவப் பொருள் என்பது பலரும் அறவிதில்லை. அதாவது வெண்ணடைக்காய் குளிர்ச்சியான தன்மை கொண்டது. வெண்டைக்காயை சமைக்காமலும் சாப்பிடலாம். வெண்டைக்காயில் பி மற்றும் சி சத்துக்களும், உயிர்ச்சத்துக்களும் இருக்கின்றன.
இதனை சமைக்கும் போது சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதை அடிக்கடி உட்கொண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாட்பட்ட கழிச்சல் நீங்கும். உடல் சூட்டால் அவதிப்படுபவர்களுக்கு வெண்டைக்காய் நல்ல மருந்தாகும். உஷ்ண இருமலைக் குணமாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சுகள் இரண்டொன்றை பச்சையாகவே தினந்தோறும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால், மருந்து மாத்திரை இல்லாமலேயே விந்து ஒழுக்கம் சரியாகிவிடும். வாய்வுத் தொல்லை உள்ளவர்கள் மட்டும் வெண்டைக்காயை குறைவாக உண்பது நல்லது.
கத்தரிக்காய் : இதில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும், அனைத்திலும் உள்ள சத்து ஒன்றுதான். சுவையில் மட்டுமே கத்திரிக்காயில் மாற்றம் உண்டு. பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. இதில் தசைக்கும், ரத்தத்திற்கும் ஊட்டம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் பிரச்சினைகள் விலகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இந்த காயைப் பயன்படுத்துகிறார்கள். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு கத்திரிக்காய் நல்லது. அம்மை நோய் வராமல் தடுக்கும் ஆற்றலும் கத்திரிக்காய்க்கு உண்டு.
முற்றிய கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வந்துவிடும். அதில்லாமல் ஏற்கனவே சரும வியாதி இருப்பவர்கள் கத்திரிக்காயை உண்பதால் வியாதி அதிகரிக்கும். நமைச்சல் உண்டாகும்.
முள்ளங்கி : வேர்ப்பகுதியில் உருவாகும் காய் முள்ளங்கியாகும். முள்ளங்கியில் ஏ சத்து அதிகம் இருப்பதால் கண் பார்வைக்கு அதிகம் உதவுகிறது. இதில் சோடியம் மற்றும் குளோரின் இருப்பதால் மலச்சிக்கலை குணப்படுத்தும். வயிற்று எரிச்சல், புளியேப்பம் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் ஆற்றல் முள்ளங்கிக்கு உண்டு. தீப்புண்களுக்கும் முள்ளங்கிச் சாறு மருந்தாகப் பயன்படும். மேலும் முள்ளங்கியில் கால்ஷியம், மாங்கனீஸ் கலந்துள்ளதால் பெண்களுக்கு மிகவும் நல்லது. அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுபவர்கள், முள்ளங்கிச் சாற்றில் கற்கண்டு கலந்து குடித்து வந்தால் கரு நிலைக்கும்.
அவரைக்காய் : கொடியில் காய்க்கும் காயில் அவரைக்காய்க்கு முதலிடம் உண்டு. இதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை, நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை வலுவாக்கும். காம உணர்ச்சியைப் பெருக்கும். சூடான தேகம் கொண்டவர்களுக்கு இது மிகவும் நல்லது. ரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதை சாப்பிடலாம்.
புடலங்காய் : நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய் இது. மேலும், உடலுக்கு அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தும். சூடான தேகம் கொண்டவர்கள் இதை அதிக அளவில் உணவில் எடுத்துக்கொள்வது நல்லது. தொடர்ந்து புடலங்காய் சாப்பிட்டு வந்தால் தேகம் செழிப்பாகும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாதம், பித்தம், கபம் பிரச்சினைகளால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும் சக்தி இதற்கு உண்டு. வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி பிரச்சினைக்கும் இது நல்லது. தொடர்ந்து இதை உண்டு வந்தால் காமத்தன்மை பெருகும்.
பீட்ரூட் : பீட்ரூட் என்றதும் எல்லோருமே சொல்லிவிடுவார்கள், இது ரத்த விருத்திக்கு உதவும் என்று, அது மட்டுமல்ல பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% கொழுப்புச் சத்தும், 0.8% தாது உப்புக்களும், 0.9% நார்ச்சத்தும், 8.8% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துகளும், வைட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் போன்றவையும் உள்ளன. பீட்ரூட் கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.
கொத்தவரக்காய் : இது சிறுநீரைப் பெருக்கும். தேக சூட்டை அதிகரிக்கும் குணம் இதற்கு உண்டு என்பதால் இதை அளவோடு எடுத்துக்கொள்வதுதான் நல்லது. அதனால் இது பத்தியத்திற்கு உதவாது. இதன் கெட்ட குணங்களைப் போக்க இத்துடன் தேங்காய், பருப்பு, இஞ்சி, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து சமைக்க வேண்டும்.
சுரைக்காய் : இது உடல் சூட்டைத் தணிக்கக்கூடியது. சிறுநீரைப் பெருக்குதல், உடலை வலிமையாக்குதல், தாகத்தை அடக்குதல் போன்றவற்றிலும் உதவுகிறது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். இதன் விதைகள் வீரிய விருத்தியை ஏற்படுத்தும்.

முல்லா நஸ்ருதின் கப்பலில் வேலை கேட்டு விண்ணப்பித்து இருந்தார் .அவர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டார் .அவரிடம் நேர்முகத் தேர்வு நடத்தியவர் கேட்டார் “புயல் வருமானால் என்ன செய்வீர் ?" என்று .
அவர் சொன்னார் “நங்கூரத்தை நாட்டுவேன்“ என்று “முன்னைவிட பெரியதாய் இன்னொரு புயல் வருகிறது அப்போது நீர் என்ன செய்வீர் ?”
“நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன் “என்றார் அவர் .இப்படி அது சென்று கொண்டு இருந்தது .
“…பத்தாவது புயல் !”
நஸ்ருதின் சொன்னார் “நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன் “
அந்த மனிதர் கேட்டார் .”ஆனால் இத்தனை நங்கூரத்தை நீர் எங்கிருந்து பெறுவீர் ?”என்று
அதற்கு நஸ்ருதின் சொன்னார் .”தாங்கள் எங்கிருந்து புயல்களை பெறுவீர்களோ அங்கிருந்துதான் “

Subscribe to:
Comments (Atom)