கண்ணா நீ
கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...
ஒரு பொண்ணு போட்டோவுல
தேவதைமாதிரி இருந்தாலும்
நெகடிவ்லபிசாசு மாதிரிதான் இருப்பா
அப்பா அடிச்சா வலிக்கும்
அம்மா அடிச்சா வலிக்கும்
ஆனால் சைட் அடிச்சா வலிக்காது
காதல் ஒரு மழை மாதிரி,
நனையும் போது சந்தோஷம்.
நனைந்த பின்பு ஜலதோஷம்.
மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?
ஐந்து கேள்விப்பா
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?
முதல் மூணும் கடைசி இரண்டும்
வெரிகுட் கீபிடப்
டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????
என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.
நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.
டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா'' எந்த அளவுக்கு பாக்குறாங்க?''கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!
வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?
சர்தார்: ஆகிவிட்டது.
வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?
சர்தார்: ஒர் பெண்ணை.
வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?
சர்தார்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..
சார்,
டீ மாஸ்டர்டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர்பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானேஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?...
''நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க''
''அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா இருக்கும்''
ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5 ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!
உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.
இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க. நீங்க கேட்டீங்களா?
இல்லை அவங்களே சொன்னங்க...
Thursday, November 11, 2010
Tuesday, November 2, 2010
தேனீயைப் பாருங்கள்
* மலரில் உள்ள தேனை மட்டுமே தேனீ அருந்தும். சாதாரண ஈயோ பேதமில்லாமல்
எதிலும் அமரும் சுபாவம் கொண்டது. அதுபோல நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள்
நல்ல செயல்களை மட்டுமே செய்வார்கள்.
* ஒரு பொருளை நாம் விரும்பத் தொடங்கும்போதே, அதை ஒருநாள் வெறுக்கவும்
வேண்டிவரும் என்ற உண்மையை நாம் உணர்வதில்லை. ஆனால், விரும்பும்போதே
வெறுக்கவும் தெரிந்து கொண்டவர்கள் வீணான மனவருத்தங்களுக்கு ஆளாக
நேர்வதில்லை.
* ஆத்திரம் என்பது உள்ளத்தில் எழும்போது, அறிவு தன்னை திரையிட்டுக்
கொள்ளும். ஆத்திரம் கொண்டவன் தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வதை தடுப்பது
என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.
* ஆத்திரம் கொண்டவன் செய்யக் கூடாத செயல்களை புத்தியின்றி செய்ய
தலைப்படுவான். அதனால், வாழ்நாள் முழுவதும் தான் செய்த பழிச்செயலை எண்ணி
வருந்துவான். அதனால், ஆத்திரத்தை விடுத்து சாந்த குணத்தை பின்பற்றுங்கள்.
* தீயகுணம் கொண்டவர்கள் இறந்ததும் மீண்டும் இம்மண்ணில் உடனே பிறந்து
விடுவார்கள். இறைவன் அம்மனிதர்களின் பாவ விமோசனத்திற்காக உடனே திருப்பி
அனுப்பி விடுகிறான். வாழும் காலத்தில் நன்மையை செய்பவனே முக்தி அடைய
தகுதியானவன்.
-பட்டினத்தார்.

Monday, November 1, 2010
வானமே இடிந்தாலும் பயப்படாதீர்! - பாரதியார்
* இந்த உலகில் உள்ள அனைவரும் எதிர்த்து நின்றாலும் அச்சம் கொள்ளக்கூடாது.
தலையில் வானமே இடிந்து வந்து விழுந்தாலும் பயம் இருக்கக்கூடாது.
* பயம் என்னும் பேயினை அடித்துவிரட்டுங்கள். பொய் என்னும் பாம்பைக்
கொல்லுங்கள். மறைந்து வந்து தாக்கும் எமனும் நடுங்கும்படி விழிப்போடு
இருங்கள். 'உயிர்களைப் பறிக்கும் காலனே! உன்னைச் சிறு புல்போல
மதிக்கிறேன். என் கால் அருகே வந்தால் சற்றே மிதிப்பேன்' என்று மனதுக்குள்
அடிக்கடி சொல்லுங்கள்.
* காலம் மிக முக்கியமானது. அதுபோய் விட்டால் திரும்ப வராது.சென்றதையே
எண்ணி கவலை என்னும் குழியில் குமைந்து கிடக்கவும் கூடாது. இன்று புதிதாய்
பிறந்தோம் என்ற எண்ணத்துடன், திடமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழுங்கள்.
தீமையை விரட்டியடியுங்கள்.
* பெருமையையும், மேன்மையையும் பெறுவதற்கு முதலில் உங்களை நீங்களே வெல்ல
வேண்டும். வெல்லும் திறமை இல்லாமல் உலகில் எதையும் சாதிக்க முடியாது.
ஆனால், இதற்கெல்லாம் அன்னை பராசக்தியின் துணையும் வேண்டுமென்பதால் அதை
அவளிடம் வேண்டிப் பெறுங்கள்.
-பாரதியார்

மேன்மைக்கான வழி
வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு. வெகு தூய்மையான வீரசாகசமான இத்தகைய விளையாட்டில் வெற்றி பெறவும், உங்கள் வெற்றி விளையாட்டைத் தொடர்ந்து விளையாடவும் உச்ச உயர் மட்டத்திலே நிலைத் திருக்கவும் தேவையான மிகச் சிறந்த மூன்று ஒழுங்கு முறைக் கட்டுப்பாடுகள்,
1. பேசுவதைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாகச் செவி கொடுத்தல்.
2. ‘முடியாது’ என்று சொல்ல கற்றுக்கொள்ளுதல்.
3. இறுக்கத்திலும் இனிமையான குணத்தை வளர்த்துக் கொள்ளுதல்.
பேசுவதைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாகச் செவிகொடுத்தல்
நான் சிறுவனாக இருந்த போது பேசுவதை மிகவும் விரும்பினேன். ஒரு நாள் என் அம்மா என்னை உட்காரவைத்து “ஒரு காரணமாகத்தான் உனக்கு இரண்டு காதுகளும் ஒரே ஒரு வாயும் தரப்பட்டுள்ளது. அதாவது நீ எவ்வளவு பேசுகிறாயோ அதுபோல் இருமடங்கு பிறர்பேசுவதைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்பது தான் அக்காரணம்” என்று விலக்கினார். அற்புதமான கருத்து, நான் இன்றும் அதைச் செயல்படுத்த முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறேன்.
ஒருவருக்கு மதிப்புகொடுக்க, மரியாதை செலுத்த மிகச் சிறப்பான வழிகளில் ஒன்று அவர் கூறுவதைக் கவனமாக கேட்பது. அதன் மூலம் ஒரு ஆழமான மனித உறவை நம்மால் ஏற்படுத்திக் கொள்ளமுடியும். ஒரு சிலர் சொல்வதை நாம் கவனமாக கேட்கும் போது வெறும் காதுகளா லும், மனதினாலும் மட்டுமல்லாமல், நமது முழு உயிராலும், உடன் ஒவ்வொரு அணுவாலும் கேட்கும் போது அது அவருக்கு ஒரு செய்தியை தெரியப்படுத்துகிறது.
“நீங்கள் சொல்வதற்கு நான் மதிப்பளிக் கிறேன். உங்களது வார்த்தைகளைக் கவனமாக செவிமடுக்குமளவு நான் உங்கள் பால் பணிவு கொண்டிருக்கிறேன்” என்பது தான் அச்செய்தி. நம்மில் மிகச் சிலரே கேட்பதில் நல்ல திறன் கொண்டவர்களாக இருக்கிறோம். சில சமயம் பயணத்தின் போது ஏறி அமர்ந்ததி ருந்து இறங்கும் வரையில், அருகில் இருப்பவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பதுண்டு. ஆனால் இடையில் ஒருமுறை கூட நமது பெயரையோ, நாம் எங்கிருந்து வருகிறோம் என்பதையோ, நாம் என்ன செய்கிறோம் என்பதையோ ஒரு வார்த்தையேனும் கேட்டிருக்க மாட்டார்.
இதனால் நமக்கு என்ன தெரியவருகிறது என்றால் உணரும் திறன் அதாவது தம்மை சுற்றிலும் நிகழும் விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்ளும் அறிவு என்று அறிவியல் அறிஞர்கள் குறிப்பிடும் ஒன்று அவரிடம் கிடையாது.
நம்மில் பலரும் ஒருவர் பேசிமுடிக்கும் வரையில் காத்துக் கொண்டிருப்பதைத் தான் “கவனிப்பது, ” “செவிகொடுப்பது” என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதாவது அவர்கள் பேசி முடிக்கும் வரையில் நாம் எதுவும் பேசமால் காத்துக் கொண்டிருத்தல். அந்த இடைப்பட்ட நேரத்திலும், ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் மற்றவர் பேசுவ தில்லை. உண்மைதான். ஆனால் இதில் வருத்தம் தரும் விஷயம் என்னவென்றால் ஒருவர் பேசும்பொழுது மற்றவர் அதைக் கேட்பதில்லை, கவனிப்பதிலை. மாறாக தான் என்ன பதில் சொல்லப் போகிறோம் என்று தான் மனதிற்குள் ஒத்திகை பார்த்துக் கொன்டிருக்கிறோம்.
அதாவது “உன்னால் தலையை ஆட்ட முடிந்த போது பேசாதே” என்ற கூற்றுதான் ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு தொழிலதிபராக, ஒரு குடும்பத்தின் அங்கத்தினராக, ஒரு மனிதராக இந்த விஷயத்தில் சரியாக செயல்படுவதைக் கற்றுக் கொண்டுவிட்டீர்களானால் உங்கள் திறமை விண்ணுயரப் பறக்கத் தொடங்கி விடும்.
பேசுவதைப் போல இருமடங்கு கேளுங்கள். ஒரு உலகத்தரம் வாய்ந்த காது கொடுத்துக் கேட்பவராக மாறிவிடுங்கள். பலர் உங்களிடம் சொல்ல விரும்பும் செய்திகளில் வெகு தீவிரமான ஈடுபாடும், ஆர்வமும் கொள் ளுங்கள் அதன்பின் மற்றவர்கள் உங்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பாருங்கள். அவர்கள் உங்களை நேசிக்கத் தொடங்கிவிடுவார்கள், மிகமிக வேகமாய்!
“முடியாது” என்று
சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்
முக்கியம் இல்லாத ஒன்றுக்கு சரி என்று நீங்கள் சொல்லுகிற ஒவ்வொரு முறையும், முக்கிய மான வேறு ஏதோ ஒன்றுக்கு இல்லை என்று சொல்க்கொண்டிருக்கிறீர்கள்.
ஆமாம் சாமிகள் ஒருபோதும் மகத்தான எதையும் சாதித்ததே இல்லை. இல்லை முடியாது என்று சொல்லக் கற்றுக்கொள்வதில் நிறைய பயன் உள்ளது.
ஒரு கப் காபி குடித்த வண்ணம் வம்பு பேச்சு பேச விரும்பும் நண்பனுக்கு, தோழிக்கு முடியாது என்று சொல்லுங்கள். தனது எதிர்மறை சிந்தனையையும், எதிலும் நம்பிக்கை யற்ற கொள்கைகளையும் பரப்ப விரும்பும் உடன் பணியாற்றுபவருக்கு இல்லை என்று சொல்லுங்கள்.
உங்கள் கனவுகளைக் கண்டு எள்ளி நகையாடி, உங்கள் மீதே உங்களின் நம்பிக்கையை இழக்கச் செய்யும் உறவினருக்கு இல்லை என்று சொல்லிவிடுங்கள். உங்கள் வாழ்க்கைப் பணியில் செலவிடவேண்டிய நேரத்தை இழுத்து உறிஞ்சிக் கொள்ளும் சமுதாயப் பொறுப்புகளுக்கு முடியாது என்று சொல்லுங்கள்.
எல்லா மனிதர்களுக்கும் எல்லாமுமாக நீங்கள் இருக்கமுடியாது. நம்மில் மிகச் சிறந்தவர்களால் மட்டுமே அது முடியும். உங்கள் முதன்மை அம்சங்களைத் தெரிந்த கொள்ளுங் கள். உங்களின் இலக்குகளைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு மனிதனாக ஒரு சிறப்பான செயல்பாட்டை செய்யவும், ஒரு நல்ல தெளிவான முடிவை எடுத்துள்ளீர்கள் என்று நீங்கள் உணர வேண்டும். அவ்வாறு உணர்வதற்காக வரப்போகும் வாரங்கள், மாதங்கள், ஆண்டுகளில் என்னென்ன காரியங் களை செய்தாக வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். அதன் பின்னர் அவற்றைத் தவிர பிற எல்லாவற்றிக்கும் இல்லை முடியாது என்று சொல்லிவிடுங்கள் கண்டிப்பாக இதனால் உங்களைச் சுற்றிலும் உள்ளவர்களால் சிலர் வருத்த மடையக் கூடும். ஆனால் இதைச் சொல்லுங்கள்.
பிறரது பாரட்டைப் பெற்று அண்டி வாழ விரும்புகிறீர்களா? அல்லது உங்களது நிதர் சனமான உண்மை மற்றும் கனவுகளுக்கு ஏற்ப வாழ விரும்புகிறீர்களா? முடிவு செய்து கொள்ளுங்கள்.
இறுக்கத்திலும் இனிமையான குணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்
டாக்டர் மார்டின் லூதர் கிங் ஜீனியர் தனது உரையில் இவ்வாறு ஒரு முறை கூறி யுள்ளார். ஒரு மனிதனின் இறுதி மதிப்பீடு என்பது சுகமான மற்றும் வசதியான சமயங் களால் அவன் எங்கே நிற்கிறான் என்பதைப் பொறுத்து அமைவதில்லை. மாறாக சவால்கள் மற்றும் எதிர்ப்புகள் ஏற்படும் நேரங்களில் அவன் எங்கு நிற்கிறான் என்பதைப் பொறுத்துதான் அது அமைகிறது. மிகவும் உண்மை! மனிதர் களாக நாம் என்னவாக இருக்கிறோம், எப்படி இருக்கிறோம், என்பது சுகமான நேரங்களைக் காட்டிலும் துயரமான நேரங்களில் தான் முழுமையாக வெளிப்படுகிறது. சந்தர்ப்பங்கள் நன்றாக இருக்கும் போது யாரால் வேண்டு மானாலும் நேர்மறையாகவும், இனிமையாகவும், கனிவுடனும், பண்புடனும் இருக்க முடியும்.
வாழ்க்கை தனது தவிர்க்க முடியாத வளைவுகளில் ஒன்றை அனுப்பும் பொழுது அவர்கள் எவ்வாறு அதை எதிர்கொள்கிறார்கள் என்பது தான் அசாதாரணமான குணாம்சம் கொண்டவர்களை நம்மிடமிருந்து பிரித்து வேறுபடுத்திக் காட்டுகிறது. அவர்கள் உடைந்து போவதில்லை, சரணடைவதில்லை, மாறாக தமக்குள்ளேயே புகுந்து சென்று தமது உயர்வான இயல்புகளை இன்னும் அதிகமான உலகிற்கு வெளிக்காட்டுகிறார்கள்.
எந்த ஒரு வாழ்க்கையும் மிகச் சரியாக அமைந்து விடுவதில்லை. நாம் எல்லோருமே சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
பெரியவர், சிறியவர் என இந்த நிமிடத்தில் உலகில் எங்கோ ஓரிடத்தில் தமது குழந்தையின் மரணத்தைச் சமாளித்துக் கொண்டு சிறந்தவர்களால் மட்டுமே அது முடியும். உங்கள் முதன்மை அம்சங்களைத் தெரிந்த கொள்ளுங் கள். உங்களின் இலக்குகளைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு மனிதனாக ஒரு சிறப்பான செயல்பாட்டை செய்யவும், ஒரு நல்ல தெளிவான முடிவை எடுத்துள்ளீர்கள் என்று நீங்கள் உணர வேண்டும். அவ்வாறு உணர்வதற்காக வரப்போகும் வாரங்கள், மாதங்கள், ஆண்டுகளில் என்னென்ன காரியங் களை செய்தாக வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். அதன் பின்னர் அவற்றைத் தவிர பிற எல்லாவற்றிக்கும் இல்லை முடியாது என்று சொல்லிவிடுங்கள் கண்டிப்பாக இதனால் உங்களைச் சுற்றிலும் உள்ளவர்களால் சிலர் வருத்த மடையக் கூடும். ஆனால் இதைச் சொல்லுங்கள்.

- K. நாகராஜ்
நன்றி - தன்னம்பிக்கை

சொத்து வாங்க ஒரு செக்லிஸ்ட்
சம்பாதிக்கிற பணத்தை ஏதாவது ஒரு நிலத்துல போடு. அது உனக்கு பின்னால நிலையான வருமானத்தைக் கொடுக்கும்"
இது ரஜினிக்கு அவரோட அப்பா சொன்ன அறிவுரை. நல்ல அட்வைஸ் தான். உண்மையான அட்வைஸ் தான்.
சரி... இப்ப, போன வருஷம் சரிஞ்ச ரியல் எஸ்டேட் மார்க்கெட் விலை திரும்பவும் உயர தொடங்கியுள்ளதாக செய்திகள் வருகிறது. அப்படியே, பிடிச்ச இடத்தில் மனை வாங்கினாலும், பிரச்சினை இல்லாமல் வாங்குவது எப்படி? வாங்குபவர்களுக்கு உதவ, சில டிப்ஸ். செக்லிஸ்டாகவும் பயன்படுத்தலாம்.
இந்த பதிவு இப்போது தேவையில்லை என்றாலும், பின்னால் உதவும். புக்மார்க் செய்துக்கொள்ளவும்.
முழுமையாக இருக்கும் என்று உறுதியாக சொல்லமுடியாது. ஏனெனில், முழுமைக்கு முடிவில்லை.
- நிலத்தின் உரிமையாளர் உயிரோடு இல்லையென்றால், அனைத்து வாரிசுதாரர்களின் சம்மதத்தோடு நிலம் விற்கபடுகிறதா? என்று தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமான விஷயம், யாரெல்லாம் வாரிசுதாரர்கள் என்று வாரிசு சான்றிதழ் மூலம் தெரிந்து கொள்வது.
- உரிமையுள்ள வாரிசுகளில் யாரேனும் மைனராக இருந்தால், உயர்நீதிமன்றம் நியமிக்கும் காப்பாளர் (Guardian) மூலம்தான் சொத்து விற்கப்படவேண்டும்.
- மனநலம் பாதிக்கப்பட்டவரின் சொத்தை வாங்குவதற்கும் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றாக வேண்டும்.
- அதிகாரம் பெற்ற முகவர் (Power of Attorney Holder) மூலம் சொத்து வாங்கும்போது, முகவருக்கு சொத்தை விற்கும் அதிகாரம் இருக்கிறதா என்பதை அதிகார ஆவணத்தை தெளிவாக படித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், விற்பனை ஒப்பந்தம் செய்வதற்கு மட்டும் கூட அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கலாம். அப்படிபட்டவரிடம் இருந்து விற்பனை ஆவணம் பதிவு செய்துக்கொள்ள முடியாது.
- அதிகாரம் கொடுத்தவர் உயிரோடு இருக்கிறாரா? என்று தெரிந்துக்கொள்ளவும். இல்லையென்றால், அதிகாரமும் இல்லை.
- உங்களிடம் கொடுக்கப்பட்ட விற்பனை ஆவணம், மூல ஆவணமா (Original Deed) அல்லது படி ஆவணமா (Duplicate copy) என்று தெரிந்துக்கொள்ள வேண்டும். மூல ஆவணம் தான் தேவை.
- முன்பணம் கொடுப்பதற்கு முன் கண்டிப்பாக மூல ஆவணத்தை பார்க்க வேண்டும். மூல ஆவணம் இல்லையென்றால், சொத்து அடமானத்தில் இருக்கலாம்.
- 13 ஆண்டுகள் வில்லங்க சான்றிதழ் போதும். 30 ஆண்டுகள் ரொம்ப நல்லது.
- சொத்தின் உரிமையை (Ownership) ஆராய்ந்து தெரிந்துக்கொள்வது போல், உடமை (Possession) பற்றியும் தெரிந்துக்கொள்ள வேண்டும். பட்டா பார்த்து, உடமையை தெரிந்துக்கொள்ளலாம். விவசாய நிலமென்றால், சிட்டா.
- மூல ஆவணம் நமக்கென்று கிடைக்க வாய்ப்பில்லாத அபார்ட்மெண்ட் ப்ளாட் விற்பனையின் போது, மூல ஆவணத்தை பார்வையிடுவது அவசியம்.
- அபார்ட்மெண்ட்டில் வீடு வாங்கும் போது, மூல ஆவணம் அடமானத்தில் இருந்தாலும், நீங்கள் வாங்கும் வீட்டின் மீது வங்கிக்கு எந்த உரிமையும் இல்லையென்று சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும்.
- அபார்ட்மெண்ட் கட்ட அனுமதி, திட்டத்தின் அனுமதி, வரைபடத்தின் அனுமதி என்று அனைத்து அனுமதியையும் பார்க்க வேண்டும்.
- அனுமதி பெற்ற வரைப்படத்தை மீறி கட்டிடம் கட்டப்பட்டிருக்க கூடாது.
- விற்பனை ஆவண பதிவிற்கு கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில், விற்பனை ஒப்பந்தம் செய்துக்கொள்வது நல்லது.
- விற்பனை ஒப்பந்தத்தில், முன்பணம், விற்பனைத் தொகை, கால அவகாசம், நீட்டிப்புக்கான நிபந்தனைகள், விற்பனை தவறும் பட்சத்தில் தரப்பட வேண்டிய இழப்பீடு ஆகிய அனைத்தும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.
- நிறுவனங்களிடம் இருந்து சொத்து வாங்கும் போது, உரிமை, உடமைகளுடன், அந்த நிறுவனத்தின் விதிமுறைகளை பற்றியும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
- பொதுவாக ஒரு சொத்து வாங்குவதற்கு முன், அதன் உரிமையாளரிடம் வாங்க வேண்டியவை,
* விற்பனை ஆவணம்
* தாய் ஆவணங்கள்
* வில்லங்க சான்றிதழ்
* பட்டா, சொத்து வரி ரசீதுகள்
நிலத்தை பொறுத்து, உரிமையாளரை பொறுத்து இது மாறுபடும். தேவைப்படும் ஆவணங்கள் கூடும்.
ஹாப்பி ப்ராபர்டி பர்சேஸ்!
நன்றி - வழக்கறிஞர் த.இராமலிங்கத்தின் ‘தைரியமாக சொத்து வாங்குங்கள்’
விகடன் பிரசுரம்.

எல்லாருகிட்டயும் நல்ல பேர் வாங்கறது எப்படி? முடிஞ்ச அளவு முயற்சி பண்ணிபாருங்க
" நான் நிறைய நல்ல காரியம்லாம் பண்ணிக்கிட்டுருக்கேன். இருந்தாலும் எனக்கு ஒரு பெரிய குறை !" அப்பிடின்னு என் நண்பர் சொன்னாரு.
"என்ன குறை ?" ன்னு நானும் கேட்டேன்.
" என்னை யாரும் நல்லவன்னு சொல்றதில்லே! அதுதான் குறை !" ன்னார் அவர்.
நல்ல செயல்களை செய்யுறதுங்கறது வேறே! நல்லவன்னு பேர் எடுக்கறது வேறே !
நல்ல பேர் வாங்குறதுன்னா சும்மாவா ?
அதுசரி... எல்லாருகிட்டயும் நல்ல பேர் வாங்கறது எப்படி?
இதுக்கு ஒரு அனுபவசாலி (டேல் கார்னர்) சில வழிகளைச் சொல்கிறார்.
அப்டியாவது நல்ல பேர் வாங்க முடியுதான்னு பார்ப்போமே! என்ன சொல்றீங்க ?
அவரு முக்கியமா இதுக்கு ஒரு எட்டு வழிகளைச் சொல்றாரு! எது எது நம்மாலே முடியுதோ அந்த வழியில்லேயெல்லாம் போய் பார்கலாமே!
அவரு சொல்ற முதல் வழி : மற்றவங்களை உண்மையாவே பாராட்டுறதுக்குப் பழகணும்ங்கறார்.
நம்மள்ல பல பேர் எப்பிடின்னா, அடுத்தவங்க ஏதாவது ஒரு நல்ல காரியம் பண்ணினா, அவங்களை பாராட்டுறதுக்கு பதிலா அவங்க மேலே பொறாமைப்பட ஆரம்பிச்சுடுறோம்! அல்லது அவங்க கிட்ட பேசுறதை நிறுதிக்கிறோம்.
அதனாலே நம்ம பேரும் கெட்டுப் போவுது; உடம்பும் கெட்டுப் போவுது.
பிறர் மேலே உண்மையாவே அக்கறை கொள்ளனும்ங்கறது ரெண்டாவது வழி.
உங்க பக்கத்துல இருக்குறவருக்கு லேசா தலைவலி. அதுக்கு உங்ககிட்டக்க மாத்திரை இருக்கு. அப்பிடி இருந்தா அதுலே ஒண்ணை கொடுத்து உதவுங்களேன். என்ன கொறைஞ்சிட போவுது இப்ப.
ஒருக்கால் அந்தத் தலைவலியே நீங்க பக்கத்துலே இருக்கறதுனாலே கூட அவருக்கு வந்துருக்கலாம்!!!
அடுத்தவங்க ஒரு தவறு பண்ணிபுட்டாங்கன்னா அதை மறைமுகமா சுட்டிகாட்டணும்.
"அய்யய்யோ, இப்படி பண்ணிப்புட்டீங்களே !" ன்னு ஆரம்பிகப்புடாது! தவருங்கறது திருத்திக் கொள்ளக்கூடியதுதான் ங்கறதை அவருக்கு உணர்த்தி ஊக்கம் அளிக்கணும்.
"பரவாயில்லே இனிமே இதுமாதிரி நடக்காமே பார்த்துக்கலாம் !" ன்னு சொல்லணும்.
உங்களுக்கு எதிர்லே இருகரவங்களை அலட்சியப் படுத்தப்புடாது! அவரும் முக்கியமானவர்தான் ங்கறதை அவரே உணர்ற அளவுக்கு நீங்க நடந்துக்கணும்.
அதுக்கு என்ன பண்ணலாம்.
அவருடைய ஆலோசனைகளையும் அடிக்கடி கேளுங்க;
"இதை பத்தி நீங்க என்ன நினைகறீங்க ?" ன்னு கேளுங்க! "என்னங்க... நாணன் சொல்றது சரிதானா ?" ன்னு கேளுங்க.
அவரையும் பேசுறதுக்கு ஊக்கப்படுத்துங்க. நீங்க மட்டுமே பேசிக்கிட்டுருக்காதீங்க. அவர் பேசுறதையும் பொறுமையா கேளுங்க. அப்பதான் உங்க பேர்லயும் அவருக்கு ஒரு நல்ல அபிப்பராயம் வரும்!
ஒரு கடுமையான வாக்குவாதம் பண்ணிக் கிட்டுருக்கீங்க; அதுமாதிரி வாக்குவாதங்கள்லேயிருந்து சிறந்த பலன் பெறனும்னா அதுலேயிருந்து ஒதுங்குறதுதான் நல்ல வழியாம்.
நழுவறதுக்கு நமக்கு சொல்லியா கொடுக்கணும்? அதுதான் நமக்கு கைவந்த கலையாச்சே!
இன்னொரு விஷயம் என்னன்னா.... அடுத்தவங்களை மகிழ்ச்சியடைய வைக்கிறது மூலமா நாமளும் மகிழ்ச்சியடையுறோம் ங்கறதை நல்ல புரிஞ்சுக்கணும்.
சில பேருக்கு அடுத்தவங்களை அதிர்ச்சியடயவச்சி வேடிக்கைப் பார்க்குறதுலேயே ஒரு தனி சுவாரஸ்யம்! அதுலாம் ரொம்ப தப்பு!
அப்புறம் இன்னொரு முக்கியமான பாயிண்ட்.
ஒருத்தருக்கு அவரோட பேர் மட்டும்தான் அவரைப் பொருத்தவரைக்கும் மிக இனிமையான வார்த்தை அப்படிங்கறதை ஞாபகத்திலே வச்சிக்கணுமாம்.
அதனாலே அவங்க பேரை எழுதுறப்போவும் சொல்றப்போவும் சரியா எழுதணும்- சரியா சொல்லணும்! அது அவங்களுக்கு சந்தோஷமா இருக்கும்.
நல்ல பேர் வாங்குறது எப்படிங்கறதுக்கு ஒரு வெளி நாட்டு நிபுணர் சொல்லியிருக்குற யோசனைகள் இவ்வளவும்.
இதெல்லாம் உங்களால முடிஞ்ச அளவு முயற்சி பண்ணிபாருங்க அப்பனாச்சும் நல்ல பேர் கிடைக்குதான்னு பாப்போம். !!!

கவியரசர் கண்ணதாசன் சொன்னவை
உள்ளம் உறுதியாக...
ஆசை, பரபரப்பு, ஆத்திரம், கோபம், துக்கம் போன்ற அத்தனை அலைகளும் இச்சின்னஞ்சிறிய உள்ளத்திலிருந்தே எழுகின்றன.
கண்கள் போக முடியாத தூரத்திற்கும் நினைவுகள் ஓடுகின்றன.
நடக்கக் கூடியதை மறந்து விடும் உள்ளம்;
நடக்க முடியாத ஒன்றுக்காக ஏங்கித் தவிக்கும் உள்ளம்;
உறவுக்காகவே அழுகின்ற உள்ளம்;
பிரிவினிலே கலங்குகின்ற உள்ளம்;
வெற்றியிலே மகிழ்கின்ற உள்ளம்;
தோல்வியிலே துவளுகின்ற உள்ளம்;
ஒவ்வொரு தடவையும் உடைந்து உடைந்து மீண்டும் ஒட்டப்படும் இந்த உள்ளம் உறுதியாக இருந்தால் ஞானம் கைகூடும்

கணவன் - மனைவி ஜோக்குகள்
01. மண்டையப் போட்ட புரோகிதர்.
மனைவி: என்னங்க, உங்களுக்கு விஷயம் தெரியுமா?
கணவன்: என்னம்மா விஷயம்?
மனைவி: நமக்கு கல்யாணம் பண்ணி வெச்ச புரோகிதர் மண்டையப் போட்டாராங்க :(
கணவன்: ஹும்… செஞ்ச பாவம் சும்மா விடுமா? தெய்வம்னு ஒண்ணு இருக்கு..
மனைவி: ????
=================================================
02. குப்பை வண்டியும் மனைவியும்.
மனைவி(குப்பை வண்டியை விரட்டிக் கொண்டே): என்னங்க, நான் குப்பை போட
லேட்டா போறேனா?
கணவன்: இல்லம்மா, நீ வண்டி பின்னாடி ஏறுற வரைக்கும் டிரைவர காத்திருக்கச்
சொல்லிட்டேன்..
மனைவி: உர்ர்ர்ர்ர்ர்….

03. மனைவி செல்லாத இடம்.
மனைவி: டார்லிங், இந்த வருஷம் நம்ம திருமண நாளுக்கு நான் இது வரைக்கும்
போகாத இடதுக்கு என்ன கூட்டிட்டு போங்களேன்..!
கணவன்: கண்டிப்பாம்மா.. நீ ஆசைப்பட்டு கேட்டத என்னிக்கு நான் செய்யாம
இருந்திருக்கேன்.
மனைவி: அய்யோ..! நீங்க cho chweetங்க.. அப்ப எங்கங்க போறோம்?
கணவன்: வேற எங்க? நம்ம கிச்சனுக்கு தான்..

04. தத்துவம்.
பிரம்மச்சாரிகளுக்கு 3 மடங்கு வரி விதிக்க வேண்டும். சில ஆண்கள் மட்டுமே
மகிழ்ச்சியாக இருப்பது முறையல்ல..
- ஆஸ்கார் வைல்ட்

05. லட்சாதிபதி.
மனைவி(தன் தோழியிடம்): நான் கல்யாணம் செஞ்ச உடனே என் கணவர் லட்சாதிபதி
ஆயிட்டார், தெரியுமா?.
தோழி: அப்படியா? அப்போ அதுக்கு முன்னடி எப்படி இருந்தாரு?
மனைவி: கோடீஸ்வரனா..

தெரியுமா உங்களுக்கு?
மிருகங்களில் குதிக்க முடியாத ஒரே மிருகம் யானைதான்.200 கோடி மக்களில் ஒருவர்தான் 116 வயதுக்கு மேல் வாழ்கிறார்.
எந்தக் காகிதத்தையும் பாதிப்பாதியாக ஏழுமுறைக்குமேல் மடிக்க முடியாது.
இளநீரை இரத்த நீருக்குப் (Blood plasma) பதிலாக உபயோகப்படுத்த முடியும்.
சீட்டுக்கட்டில் மீசையில்லாத ஒரே ராஜா 'ஆட்டின்' ராஜா தான்.
தொலைக்காட்சியைப் பார்க்கும்போது செலவழிக்கும் சக்தியைவிட நீங்கள் தூங்கும்போது அதிக சக்தியைச் செலவிடுகிறீர்கள்.
போயிங்757 விமானத்தின் இறக்கை ரைட் சகோதர்கள் கண்டுபிடித்த விமானத்தைவிடப் பெரியது.
கடிகாரத்தின் முட்கள் நகரும் (Clockwise) திசையில் சுழலும் ஒரே கிரகம் வீனஸ் தான்.
மார்ல்பரோ சிகரட் கம்பெனியின் முதல் உரிமையாளர் இறந்தது நுரையீரல் புற்றுநோயினால்.
வால்ட் டிஸ்னிக்கு எலிகள் என்றால் பயம்.Richard Millhouse Nixon - இந்த அமெரிக்க ஜனாதிபதியின் பெயரில் Criminal என்ற வார்த்தைக்கான எல்லா எழுத்துக்களும் உள்ளன. இதே வார்த்தைகான எல்லா எழுத்துக்களும் உள்ள பெயர் கொண்ட மற்றொரு அமெரிக்க ஜனாதிபதி William Jefferson Clinton. வண்ணத்துப்பூச்சிகள் தங்கள் கால்களால் சுவையை உணர்கின்றன.
ஒரு சூறாவளிக்காற்று பத்து நிமிடங்களில் வெளியிடும் சக்தி உலகத்தில் உள்ள எல்லா அணுயுதங்களின் மொத்த சக்தியைவிட அதிகம்.
பெண்கள் ஆண்களை விட இரண்டுமடங்கு அதிகமாக கண் சிமிட்டுகிறார்கள்.
இந்தியானாவிலுள்ள தலைமை நூலகம் ஒவ்வொரு வருடமும் ஒரு அங்குலம் கீழே இறங்குகிறது. காரணம் அந்த நூலகத்தைக் கட்டிய பொறியாளர்கள் நூலகம் எத்தனை எடை புத்தகங்களைத் தாங்கும் என்று சரியாக கணிக்கத் தவறியதுதான்.
நத்தை சாதாரணமாக மூன்று வருடங்கள் தூங்கக்கூடும்ஆங்கிலத்தில் Month என்ற வார்த்தைக்கு எதுகையாக எந்த வார்த்தையும் கிடையாது.
நமது கண்கள் பிறந்ததிலிருந்து அதே அளவுதான் இருக்கிறது - வளர்வதில்லை. ஆனால், நமது காதுகளும் மூக்கும் வளர்வது நிற்பதே இல்லை.
எல்லாப் பனிக்கரடிகளும் இடதுகைப் பழக்கம் கொண்டவை.
TYPEWRITER என்ற வார்த்தைதான் டைப்ரைட்டரின் விசைப் பலகையின் ஒரு வரிசையில் (one row) உள்ள எழுத்துக்களிலிருந்து அமைக்கக்கூடிய நீளமான வார்த்தை.

நண்பனைக் கழற்றிவிட 10 மொக்கை காரணங்கள்!!!
ஒரு நண்பனை கழற்றி விடணும்னு ஒருத்தர் நினைக்கிறார். அதுக்கு என்ன காரணம்
சொல்லலாம்னு நினைச்சப்போ, சமீபத்திலே ஒரு கட்சி இன்னொரு கட்சியை கழற்றி
விட்டதற்கு சொன்ன காரணத்தையே சொல்லிடலாம்னு முடிவு பண்றாரு.
அதாவது - எப்போவோ நடந்த ஒரு நிகழ்ச்சியை அல்லது பேச்சை காரணம் காட்டி -
நண்பனை கழற்றி விட்டுடலாம்னு நினைக்கிறாரு.
கீழ்க்கண்ட காரணங்களை பாருங்க. இதைத்தவிர வேறே ஏதாவது ஒரு காரணம்
உங்களுக்குத் தெரிஞ்சா அதையும் சொல்லுங்க...அவ்வ்வ்...
10 மாசத்துக்கு முன்னாடி - எங்கள் வீட்டுக்கு வந்தபோது இரண்டாவது கப்
காபி கேட்டாய்.
9 மாசத்துக்கு முன்னாடி - நான் என் ஆளு கூட இருக்கும்போது, வேணும்னே
'பபிள்கம்'மிற்கும் 'ச்யூவிங்கம்'மிற்கும் 6 வித்தியாசங்கள் சொல்லுன்னு
என்னை வெறுப்பேற்றினாய்.
8 மாசத்துக்கு முன்னாடி - தண்ணி அடிக்கலாம்னு வீட்டுக்கு வரச்சொல்லி
சொன்னதாலே உங்க வீட்டுக்கு வந்த எனக்கு, குடத்தை கையில் கொடுத்து
'பம்ப்'பில் தண்ணி அடிச்சிக் கொடுக்கச் சொன்னே...
7 மாசத்துக்கு முன்னாடி - நான் அனுப்பின 'Forward mail' லை அதில்
சொன்னமாதிரி நீ ஐந்து பேருக்கு அனுப்பவேயில்லை.
6 மாசத்துக்கு முன்னாடி - ஆங்கிலத்துலே லவ் லெட்டர் எழுதித்தாடான்னா,
லீவ் லெட்டர் எழுதி தந்துட்டே.
5 மாசத்துக்கு முன்னாடி - ஞாயிறு வீட்டுக்கு வா, யாரும்
இருக்கமாட்டாங்கன்னு சொல்லி நான் உங்க வீட்டுக்கு வந்தபோது, உங்க வீடு
பூட்டியிருந்துச்சு. என்னை நல்லா ஏமாத்திட்டே.
4 மாசத்துக்கு முன்னாடி - நான் உங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது,
கொடுத்த காபியில் சக்கரையே போடவில்லை.
3 மாசத்துக்கு முன்னாடி - என் ஆளு கூட இருக்கும்போது, கற்பூர பாக்கெட்டை
என்கிட்டே வாசனை காட்டி, அது என்னன்னு கண்டுபிடிக்க முடியுதான்னு பாக்கச்
சொன்னாய்.
2 மாசத்துக்கு முன்னாடி - 'பக்தி' பட சிடின்னு நீ கொடுத்த சிடி
'நிஜமாகவே' பக்தி பட சிடிதான்.
போன மாசம் - ரொம்ப நல்ல படம் என்று சொல்லி என்னை டாக்டர் விஜய்
படத்துக்குக் கூட்டிப்போனாய்.
டிஸ்கி: மக்கள்ஸ்.. நீங்க இவ்ளோ நேரம் படிச்சதுகூட முக்கியமில்லை. இனிமே
படிக்கப் போறதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம். 'லேபிளை' ஒரு தடவை
படிச்சுடுங்க.... அவ்வ்வ்வ்...
டிஸ்கி2:எனக்கு இந்த தகவல் மடலில் வந்தது.

கண்களை காக்கும் காய்கறிகள்!
பொதுவாக உடல் ஆரோக்கியதிற்கு காய்கறிகள் மிகவும் அவசியம். அதனால் தான் மருத்துவர்கள் உணவில் அதிக அளவில் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன.
பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.தினமும் எதாவது ஒரு கீரை வகை சேர்ப்பது உடல் நலத்துக்கு ஏற்றது.
குறைந்த பட்சம் வராத்திற்கு இரண்டு தடையாவது கிரை சேர்க்க வேண்டும் . அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி௧2 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை நம் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது.வைட்டமின் ஏயில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. பார்வையில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
வைட்டமின் ஏ சத்து பற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய். காரட்டில் அதிகமான வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ வாக நம் உடலில் மாற்றம் அடையும் பீட்டா கரோடின் மற்றும் அதிநிற பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும் வைட்டமின் ஏ உள்ளது.
தக்காளி, பசலை, லிவர், முட்டை, நிறமயமான காய்கறிகள், கேரட், பப்பாளி மற்றும் பச்சை இலைகளில் உள்ளது.உடலில் அதிகமாக சுரக்கும் குளூக்கோஸினால் கண்லென்ஸ் சேதமடைவதிலிருந்து புரத அமிலங்கள் நம்மை காக்கின்றன.
இறைச்சி, மீன் மற்றும் பாலில் நமக்குத் தேவையான 8 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. அரிசி, பட்டாணி, பீன்ஸ், அவரை, மொச்சை, துவரை, உளுந்து பயறு போன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ அமிலங்கள் உள்ளன.

ஆரோக்கியமான சில உணவு வகைகள்
- முனைவர் செ. சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்.,
ஆரோக்கியமான உணவு வகைகள் உள்ளது போலவே, ஆரோக்கியமாக உண்ணும் பழக்கங்களும்
உள்ளன. அவற்றைக் கடைப்பிடிப்பது உடல்நலம் காப்பதற்கு அவசியமாகிறது.
1. பசிக்கும் போது உண்ணாமல் இருக்கக்கூடாது. ஆனால் பசிக்காமல் உண்ணவே
கூடாது.
2. குறைந்த அளவு உணவையே வாயில் இடவேண்டும்.
3. அவசர அவசரமாக சாப்பிடக்கூடாது. ஆற அமர உட்கார்ந்து சாப்பிட வேண்டும்.
வாயில் சுரக்கும் உமிழ்நீர் உணவில் கலக்க அவகாசம் கொடுக்க வேண்டும்.
4. வாயில் உள்ள உணவை வயிற்றுக்குள் செலுத்திய பின்னரே மீண்டும் வாய்க்கு
உணவை எடுத்துச் செல்ல வேண்டும்.
5. பற்களால் நன்கு அரைத்து உணவை உண்ண வேண்டும். பற்களால் உணவு
அரைக்கப்பட்டால்தான் ஜீரணம் முழுமை பெறும். ஒரு மருத்துவர் என்னிடம்
கூறும்போது “சோற்றைத் தண்ணீர் போல குடிக்க வேண்டும். தண்ணீரைச் சோறுபோல
சாப்பிட வேண்டும்” என்றார். திட உணவைப் பற்களால் நன்கு அரைத்துத் திரவமாக
மாற்றி உண்ண வேண்டும்; தண்ணீராக இருந்தாலும் அதை ஒரேயடியாக குடித்து
விடாமல், கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும்.
6. காலையில் பழங்கள் மற்றும் பழச்சாற்றை உட்கொண்டு பின்னர் அரைமணி நேரம்
கழித்து திட உணவைச் சாப்பிட வேண்டும். மதிய உணவோடு அல்லது இரவு உணவோடு
பழங்கள் உண்பதை தவிர்த்துவிடுவது நல்லது. பழங்கள் இரைப்பையில் அரை மணி
நேரத்திற்கு மேல் தங்குவதில்லை. (திட உணவுகள் மூன்று மணி முதல் நான்கு
மணிநேரம் வரை இரைப்பையில் தங்குகின்றன). அவை நேராகச் சிறுகுடலுக்குச்
சென்று ஜீரணமா கிறது. வழக்கமாக நாம் உணவு உண்டவுடன் பழங்களைச் சாப்பிடு
கிறோம். வீடுகளில் கூட உணவிற்கு பின்தான் பழம். அப்படி உண்பதால் திட
உணவால் தடையுறும் பழம் அங்கு நொதித்து வாயுவை உருவாக்குகிறது. இதனால்
ஜீரணம் தடைபடுகிறது.
7. பழம் அல்லது பழரசத்தை சிறிது சிறிதாகச் சாப்பிட வேண்டும். ஒரேயடியாக
சாப்பிட்டால் பழரசம் வயிற்றில் அமிலத் தன்மையை ஏற்படுத்தி தீமை
விளைவிக்கிறது. சிறிது சிறிதாக சாப்பிடுவதால் வயிற்றில் காரத்தன்மையை ஏற்
படுத்தி நன்மையை விளைவிக்கிறது.
8. தேவைக்கு அதிகமாக உணவை எடுத்துத் தட்டில் வைக்கக் கூடாது. உணவுப்
பொருட்களை தட்டில் மீதி வைத்து வீணடிப்பதும் தேசிய இழப்பு என்பதை
நிச்சயமாக உணருங்கள். ஒரு நெல் மணியை உற்பத்தி செய்ய ஏழை விவசாயி எவ்வளவு
சிரமப்பட்டிருப்பார் என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.
9. தட்டில் வைத்துவிட்டார்களே என்பதற்காக அனைத்தையும் உண்ண வேண்டிய
அவசியம் இல்லை. உணவு அதிகம் என்றால் மீதி வைக்கத் தயங்கக்கூடாது. உணவை
வீணாக்கக்கூடாதுதான். ஆனால் வயிறு குப்பைத்தொட்டி அல்லவே.
10. சாப்பிட்டுக்கொண்டே தண்ணீர் குடிப்பது நல்லதல்ல. சாப்பிட்டு விட்டு
சுமார் 30 நிமிடம் கழித்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும். உணவோடு
அருந்தும் நீர் ஜீரணிக்கத் தேவையான அமிலங் களை நீர்த்துப் போகச்
செய்யும். ஜீரணம் தடைபடும்.
11. உண்பது சுகமே, மறுப்பதற்கில்லை. ஆனால் உணவை ருசித்து அனுபவித்து உண்ண
வேண்டும். முழுக் கவனமும் உணவில் இருக்க வேண்டும். உண்ணும் போது கவனம்
வேறு பக்கம் திரும்பி விட்டால் உண்ட திருப்தி இருக்காது. உண்ட திருப்தி
ஏற்பட மேலும் அதிக உணவு உண்ண வேண்டியிருக்கும். எனவே ஒவ்வொரு வேளை உணவு
உண்ணும்போதும் குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் செலவிட வேண்டும். அப்போது
முழுக் கவனமும் உணவி லேயே இருக்க வேண்டும். தொலைக் காட்சிப் பெட்டியை
மூடி வைத்து விட்டுத்தான் சாப்பிட வேண்டும்.
12. மனக்கவலையைப் போக்குவதற்காக உண்ணாதீர்கள். அதுவே பழக்க மாகிவிடும்.
மனஅழுத்தம் ஏற்படும் நேரத்தில் மனதை சமாளிக்க இசையைக் கேட்கலாம். ஒரு
நல்ல புத்தகம் வாசிக்கலாம். ஏன் ஒரு மணி நேரம் நடக்கலாம். அதை விடுத்து
அதிகமாக சாப்பிட்டு கிடைக்கும் மகிழ்ச்சியில் ஒருபோதும் ஒளிந்து கொள்ளக்

Subscribe to:
Comments (Atom)