உங்களது வாழ்க்கைக்கு அல்லது, உங்களது நிலைமைக்கு பொறுப்பு வேறொருவர் என்றால், அவரால் நீங்கள் பல விதங்களில் ஏமாற்றம் அடைய போவது நிச்சயம். இதை தவிர்க்க முடியாது.
எந்த ஒரு மனிதராலுமே, நீங்கள் விரும்பியபடியே 100 சதவிகிதம் நடக்க முடியாது. உங்களை சுற்றி உள்ளவர்களிடம் உங்கள் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது என்றால் நீங்கள் அதிகமாக ஏமாந்து போவீர்கள் என்பதே உண்மை.
உங்கள் எதிர்பார்புகளை அவர்களால் நிறைவேற்ற முடியாத போதும், நீங்கள் நினைத்தபடி அவர்கள் செயல்படாத போதும், அவர்கள் மீது உங்களுக்கு கோபம் வரும். மேலும் உங்கள் துன்பத்திற்கு காரணம் அவர்கள்தான் என்று நீங்கள் நம்பினால், கண்டிப்பாக உங்களுக்கு கோபம் குடி கொண்டு விடும். கோபம் வெறுப்பாக மாறும்.
உங்கள் வாழ்க்கையின் இன்பமும், துன்பமும் உங்கள் கைகளில்தான் உள்ளது. உங்கள் வாழ்க்கை அனுபவத்திற்கு வேறொரு வரை பொறுப்பாக நினைத்தால் கண்டிப்பாக ஏமாற்றம்தான் மிஞ்சும்.
Sunday, February 13, 2011
Subscribe to:
Post Comments (Atom)

உங்கள் வாழ்க்கை அனுபவத்திற்கு வேறொரு வரை பொறுப்பாக நினைத்தால் கண்டிப்பாக ஏமாற்றம்தான் மிஞ்சும். //
ReplyDeleteஓரளவு சரி.. துன்பம் அடுத்தவராலும் ஏற்படும் விபத்து போல.. ஆனால் அதை விட்டு வெளியே வரணும்.. அது நம் கையிலே..