Monday, November 1, 2010

கணவன் - மனைவி ஜோக்குகள்

01. மண்டையப் போட்ட புரோகிதர்.

மனைவி: என்னங்க, உங்களுக்கு விஷயம் தெரியுமா?

கணவன்: என்னம்மா விஷயம்?

மனைவி: நமக்கு கல்யாணம் பண்ணி வெச்ச புரோகிதர் மண்டையப் போட்டாராங்க :(

கணவன்: ஹும்… செஞ்ச பாவம் சும்மா விடுமா? தெய்வம்னு ஒண்ணு இருக்கு..

மனைவி: ????

=================================================

02. குப்பை வண்டியும் மனைவியும்.

மனைவி(குப்பை வண்டியை விரட்டிக் கொண்டே): என்னங்க, நான் குப்பை போட
லேட்டா போறேனா?

கணவன்: இல்லம்மா, நீ வண்டி பின்னாடி ஏறுற வரைக்கும் டிரைவர காத்திருக்கச்
சொல்லிட்டேன்..

மனைவி: உர்ர்ர்ர்ர்ர்….

=================================================

03. மனைவி செல்லாத இடம்.

மனைவி: டார்லிங், இந்த வருஷம் நம்ம திருமண நாளுக்கு நான் இது வரைக்கும்
போகாத இடதுக்கு என்ன கூட்டிட்டு போங்களேன்..!

கணவன்: கண்டிப்பாம்மா.. நீ ஆசைப்பட்டு கேட்டத என்னிக்கு நான் செய்யாம
இருந்திருக்கேன்.

மனைவி: அய்யோ..! நீங்க cho chweetங்க.. அப்ப எங்கங்க போறோம்?

கணவன்: வேற எங்க? நம்ம கிச்சனுக்கு தான்..

=================================================

04. தத்துவம்.

பிரம்மச்சாரிகளுக்கு 3 மடங்கு வரி விதிக்க வேண்டும். சில ஆண்கள் மட்டுமே
மகிழ்ச்சியாக இருப்பது முறையல்ல..

- ஆஸ்கார் வைல்ட்

=================================================

05. லட்சாதிபதி.

மனைவி(தன் தோழியிடம்): நான் கல்யாணம் செஞ்ச உடனே என் கணவர் லட்சாதிபதி
ஆயிட்டார், தெரியுமா?.

தோழி: அப்படியா? அப்போ அதுக்கு முன்னடி எப்படி இருந்தாரு?

மனைவி: கோடீஸ்வரனா..

No comments:

Post a Comment