நீங்கள் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்போது தான் வாழ்வில் துன்பம் நம்மை தாக்கும்போது, பாறைபோல எதிர்த்து நிற்க முடியும்.
மனிதனுக்குள் உண்டாகும் மிருகவுணர்ச்சியைக் களைந்துவிட்டால், தெய்வீக இயல்புகள் ஊற்றெடுக்கும்.
வேண்டாத பரபரப்பு, பயம், அறியாமையில் சிக்கிக்கொண்டு மனிதர்கள் தவிக்கிறார்கள். கடவுளை முழுமையாகச் சரணடைந்தால் நடப்பது எல்லாம் நன்மைக்கே என்ற தெளிவோடு உலகில் வாழமுடியும்.
உண்மையும் பொய்யும் இவ்வுலகில் கலந்தே இருக்கின்றன. தயிரில் வெண்ணெயைப் பிரித்தெடுப்பதுபோல, உண்மையை மட்டும் தேர்ந்தெடுந்தெடுங்கள். உண்மையின் பக்கமே கடவுள் இருக்கிறார். உண்மை உங்களை என்றும் காப்பாற்றும்.
-சாய்பாபா
Saturday, October 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment